36
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
வறியவராகவும் வாட்டமிக்கவராகவுமே இருந்தோம்; இப் பொழுது இவ்வாய்ப்பைப் பெற்றுள்ளோம்!
உடுத்துதலோ, போர்த்துதலோ இல்லாதது என அறிந்தும் மயிலுக்குத் தன் போர்வையை அளித்த எம் தலைவன், மதமிக்க யானையையும் எழுச்சி மிக்க குதிரையையுமுடைய பேகன், மறுமையை நோக்காமல் பிறர் வறுமையை நோக்கி ஈயும் வள்ளல் கொடையால் இந்நிலை எய்தினோம்; நீங்களும் அவன் பால் செல்வீராக” என்னும் ஆற்றுப் படைப் பாடலைப் பாடினார்.
மேலும், “நீரற்ற குளத்தை நிறையச் செய்யும்; விளை நிலத்திலே பெய்து விளைவைப் பெருக்கும். இவ்விடத்துப் பெய்து பயன் என்ன என்று எண்ணாமல் உவர் நிலத்திலேயும் பொழியும் மழை. அது போல் வள்ளல் பேகனும் இவர் அவர் என்னாமல் எவர்க்கும் கொடுப்பவன்; அவன் கொடைத் தன்மையில் இவ்வாறு கொடைத் தன்மையில் மடவனாக இருப்பானே அல்லாமல், படைக் களத்துப் புகுந்து போரிடுங் கால் மடவனாக இருக்கமாட்டான்!” என்றார்.
சங்கச் சான்றோருள் தலைப்பட்ட கபிலர், பரணர், அரிசில் கிழார், பாடுபுகழ் பெற்ற பேகன் அழியாப் புகழாளனாய் என்றும் விளங்குகிறான்!
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு’
திருக்குறள்