38
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
பட்டவராக இருந்திருக்கலாம். "முடம்பட்ட திருமாறன் அல்லன்; முட்டம் என்றும் ஊரினன் ஆதலால் அவன் முட்டத் திருமாறன் என்று விளக்கம் பெற்றது போல் முட்டத்து மோசியார் தாமோ எனக் கருதின் ஊர்ப் பெயர் உறையூர் ஏணிச்சேரி என்று இருந்தலால் அவ்வாறு கொள்ள யெல வில்லை. கூன் பாண்டியன், அந்தகக் கவி என்பார் போலக் கொள்ளலாம். உறுப்புக் குறை குறையன்று என்பது வள்ளுவம்.
அது,
உடை
உ
"பொறிஇன்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி”
யல
என்பது. பொறியாவது உறுப்பு. இன்மையாவது குறைபாடு மை. உறுப்புக்குறை பழியில்லை; உறுப்புகள் செவ்வையாய் இருந்தும் செயல்பாடாமையே பழி என்பது இதன் பொருளாம். ஆய்வேளின் அரண்மனை, மற்றைப் பெருவேந்தர்களின் அரண்மனை போலப் பொலிவுடையதாக இல்லை என்று சிலர் பேசிக் கொண்டனர். அவர்கள் பேச்சைக் கேட்ட மோசிகீரனார்,
“களாப்பழம் போன்ற கருநிறத் தண்டினையுடைய சிறிய யாழைக் கொண்டு பாடுதற்கு இனிய பாடல்களைப் பாடும் பாணர் யானைகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு போயினர். அதனால் யானைக் கூடம் வெறுமையுற்றது. அவ்விடத்தே காட்டு மயில்கள் தம் கூட்டத்தொடு வந்து தங்கின. பொன்னும் பொருளும் பரிசிலாப் பலரும் பெற்றுக் கொண்டு போயாமை யால், மகளிர் தம்மங்கல அணியை அன்றி வேறு அணிகள் இல்லாமல் உள்ளனர். இவ்வாறு ஆய் வள்ளல் அரண்மனை பொலிவு குறைந்ததென எண்ணுகின்றனர். ஆனால், சுவைமிக்க உணவுகளைப் பிறர்க்குத் தருதல் இல்லாமல் தாமேயுண்டு தம் வயிற்றையே நிரப்பிப் பாடுபுகழ் அற்றோராய் இருக்கும் அரசர் அரண்மனைப் பொலிவு, ஆய் அரண்மனைப் பொலிவுக்கு ஒப்பாக மாட்டாது” என்றார் (127)
“கொடுத்து மகிழும் பொலிவுக்குக், கொடார் வளம் பொலிவாக மாட்டாது புகழும் பெறாது ாது புகழும் பெறாது” என்று மோசியார் எண்ணியது புலப்படும்.
ஆய்வள்ளலின் கொடை வளம் கூறிய மோசியார், அவன் படை வளம் பற்றியும் கூறினார். ஆய்வள்ளலைத் தேடி வந்த இரவலர்கள் தாம் கொண்டு வந்த முழவு என்னும் பறையைப்