உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம் 5

பொதியில் மலைத் தலைவனும் சுரபுன்னைப் பூக் கண்ணி அணிந்தவனும் தப்பாத வாளினையுடையவனும் ஆகிய ஆய் அண்டிரனின் மலையைப் பாடினவோ, யானைகளை ள் மிக வுடைய இவ்வழகிய காடு” என்றார் (131).

ஆயையும் ஆயின்மலையையும் பாடிப் பரிசில் பெறுவது போல, காடே, நீ ஆயின் மலையைப் பாடியதால் இவ் யானைப் பெருக்கைப் பெற்றாயோ எனப், பாடாதது பாடுவதாய் வியந்து கூறும் மோசியார், ஆய், சுரபுன்னை மலர் சூடுபவன் என்று அவன் அடையாளப் பூவைக் காட்டினார் (131)

Ш

ஆய்வள்ளலின் அரிய பண்பு நலங்களைக் காணக் காண மோசியார்க்கு அளவிலா அன்பு உண்டாயிற்று. பண்புடைய வர்கள் இருப்பதால்தான உலகம் அழியாமல் வாழும் பேறு பெறுகிறது. அத்தகு பண்பாளர்களில் மேம்பட்டான் ஆய். அவன் வாழும் பேற்றால் ஆய்குடி பனிமால் இமயப் புகழொடு ஒப்ப விளங்குகிறது என எண்ணினார். தாம் நெடிய நாள்கள் பலப்பலரை வள்ளல்களென எண்ணிச் சென்றதையும் அவர் களைப் பாடியதையும் அவர்களைப் பற்றிக் கேட்டதையும் நினைந்து அக்காலமெல்லாம் பாழான காலம் என வருந்தினார். அதனை ஒரு பாடலாக வடித்தார் :

முன் உள்ளு வோனைப் பின்உள்ளி னேனே; ஆழ்க என் உள்ளம்; போழ்க என் நாவே; பாழூர்க் கிணற்றில் தூர்க என் செவியே;

எனத் தம் கடந்த காலக் கழிவை நினைத்து ஏங்கினார்.

66

“முன்னே நினைக்கத் தக்கவனைப் பின்னே நினைத்தேனே! அக்குற்றத்தால் என் உள்ளம் சூழ்ந்து அழிந்து போவதாக! எவரெவரையோ பாடிய என்நா துண்டிக்கப் படுவதாக!

பாழ்பட்ட ஊரின் கிணறு போல என் செவி மேடிட்டுப் போவதாக”

என்ற அவர், 'நறும்புல் மேய்ந்த கவரி மான் சுனை நீரைப் பருகித் தண்ணிய நிழலில் படுக்கும் வளமையதாம் வட திசை வான்தோய் இமயரும், இத்தென் திசை ஆய் குடியும் இல்லை யானால் இப்பரந்த உலகியல் கெட்டொழியும்' பாடினார் (132)

என்று

நல்லோர் உறையும் நிலம் அந் நல்லோரால் பாடு புகழ் பெறும் என்னும் ஔவையார் உரையை நினைவூட்டுகிறது இவ்வுறையூர் மோசியார் பாட்டு.