புறநானூற்றுக் கதைகள்
75
விட்டாள்! செங்கணான் கையிலே வெற்றிக்கொடி! வீரன் கணைக்காலன் கைகளிலே தளை!
இதற்கு முன் கணைக்காலன் கவிதைகளிலேதான் தளை களைக் கண்டான். இப்பொழுது கைகளிலே காணுகின்றான், சோழ வீரர் பற்றிச் செல்கின்றனர் சேர வேந்தனை. சேர வீரர்களோ சிதறியோடிப் புலம்புகின்றனர். ஒரே ஒரு எரிமலை மட்டும் புகைந்துகொண்டு நின்றது என்ன இருந்தாலும் உயி ரன்ன மாணவன் அல்லவா!
களம்.
-
கொடுமையின் உச்ச நிலையம்தானே கழுமலப் போர்க்
ல
கணைக்காலன் வாய் திறக்கவில்லை; வழி நடந்தான். மலை நாடு தெரியும் அளவும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றான். சோழ நாட்டின் எல்லை வந்தது. “ஐயகோ!” என்று வெம்பினான். சொந்த நாட்டைவிட்டுப் பகைவன் நாட்டுக்கு அடிமையாகப் போகவோ என்னைப் பெற்றெடுத்தனர்? சேர வீரர்கள் எத்துணைப்பேர் செத்தனர்? அவர்களோடும் நானும் செத்திருக்கக் கூடாதா? என்று ஏங்கினான். நடந்தான்! காவிரி குறுக்கிட்டது, தன் கண்ணீரை வடித்து மேலும் அதனைப் பெருக்கினான். அதன் தண்ணீரை மட்டும் குடிக்க வில்லை!
சோழன் தலைநகரம் உறையூர் நெருங்கியது. அதன் மேல் திசையில் இருந்தது கணைக்காலனுக்காகச் சிறைக்கூடம். சேரர் கோமான் சிறைக் கோட்டத்துள் புகுந்தான்.
அதன் இரும்புக் கதவுகள் மூடப் பெற்றன. அவன் இதயக் கதவு திறந்துகொண்டு குமுறியது!
பொய்கையார் சேரனுக்கு ஏற்பட்ட துயர நிலைமையை எண்ணித் துணுக்குற்றார். அவனை எப்படியும் விடுதலை செய்தே ஆகவேண்டும்; சோழன் இயல்பை ஆராய்ந்து கொண்டு பொழுது போக்குவது சரியன்று என்று நினைத்தார், விரைந்து நடந்தார், சோழ நாட்டின் தலைநகரம் நோக்கி!
சோழன் புலவர் வருகையை அறிந்தான்; மகிழ்ந்தான். தக்கமுறையில் வரவேற்றான். வாழ்த்துக் கூறினான். புலவர் எதுவும் பேசவில்லை. தன்னுணர்வு அற்றவர் போலவே அரண் மனைக்குள் உலாவினார். சேரனை எங்கேனும் காணக்கூடுமோ என்று ஏங்கினார். ஆனால் குடவாயில் கோட்டச் சிறைக் கூடத்தே இருக்கின்றான் கணைக்காலன் என்பதை அறிந்து பொறுமினார். என் செய்வது?