உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம்

5

பள்ளிக்கு அனுப்பினானா பிள்ளைகளை? நாட்டின் வேந்தன் வெளியிடத்திற்கு அனுப்புவானா? அரண்மனை தேடிவந்தார் ஆசிரியர்! அடியுண்டா? தடியுண்டா? அன்பு கமழ அருள் ஒழுகப் பாடம் புகட்டினார் ஆசிரியர். வேந்தனது அன்புக்கு உறைவிடமான பிள்ளைகளைக் கண்டிக்கலாமா? தண்டிக்கலாமா?

‘மக்கள் கண்ணிலே நீர் வடிந்தால், மன்னன் கண்ணிலே உதிரமே ஒழுகிவிடும் என்று ஆசிரியர் அறிந்துகொண்ட பின்னரும் அடிப்பரா? நயவழியால் சொல்லிக் கொடுத்தார்; பிள்ளைகளும் படித்தனர்.

இலக்கியத்தில் படித்திருந்தான் பிள்ளைக் கனி அமுதின் சிறப்பை. அப்படியே அனுபவிக்க ஆரம்பித்து விட்டான். எதற்கும் உரிமை! அவ்வளவும் உரிமை! வரன் முறை அற்ற உரிமை! இவ்வுரிமை என்ன செய்தது? ஆசிரியர் அன்புரையை மறுக்கவும், நல்லுரையை வெறுக்கவும் தூண்டியது. செல்வச் செருக்கைக் கிளறிவிட்டது. சிற்றினச் சேர்க்கையைக் கூட்டியது. "தங்களுக்கு நிகரானவர் எவருமே இல்லை; தம் நாட்டில் வாழ்வோர் அனைவரும் தமக்கு அடிமைகளே; எங்கள் கருத்து என்னவோ அதனைச் செய்து முடிக்கவே நாட்டினர் உள்ளனர்’ என்ற இறுமாப்பை வளர்த்தது.

66

மக்கள் வயதில் வளர்ந்தனர்; செருக்கிலும் வளர்ந்தனர். ஆசிரியர் உரையை மட்டுமல்ல! அறிஞர்கள் உரையையும், தந்தையார் உரையையும் மறுத்து ஒதுக்கும் அளவை அடைந்தது.

அரசனுக்கு அப்பொழுதுதான் கவலைப்பற்றியது. எல்லாம் ‘தன் வினை’ என்பதனை உணர்ந்தான். பிள்ளைப் பருவத்திலே அளவான அன்பு செலுத்தி வளர்த்திருந்தால், அளவான உரிமை கொடுத்துப் பழக்கி இருந்தால் இந்நிலைமை ஏற்படவே ஏற்படாது. செய்துவிட்ட பழியை அனுபவித்துத் தானே ஆகவேண்டும்.

சிறுவர்கள் இளைஞர் ஆயினர்; இளைஞர் காளையர் ஆயினர். காளைப் பருவத்திலே கட்டுப் பாடு வந்துவிடுமா? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? பாவம்! நாட்டின் மன்னவன் வீட்டின் நிலைமையை எண்ணி எண்ணி வேதனை கொண்டான்.

மக்கள் கொடுமையின் எல்லைக்கோடு நோக்கி நடை போட்டனர். பண்பும், ஒழுக்கமும் இல்லாத இளைஞர்,