―
திருக்குறள் ஆராய்ச்சி 1
85
IT?
லார்க்கு ஊதியம் இல்லை" என்பது வள்ளுவம் (449). அம் முறையில் உடல் நலம் இல்லையானால் உளநலம் உண்டே வாழ்வாங்கு வாழும் வகைதான் உண்டோ? ஆதலால், தற் காத்தல் என்பது தன்னைச் சார்ந்த பண்பியல், செயலியல் எல்லாவற்றையும் குறிப்பது எனினும், தன் உடல் நலம் காத்தலே முதலும், முதன்மையும் உடையதாகும்.
66
'தானும் செய்வன செய்யான்; பிறர் ஏவவும் செய்யான்; அவன் எவர்க்கு எப்பயனைச் செய்வான்? அல்லது, தனக்கேனும் எப்பயனைச் செய்வான்? அதனால், அவன் தன் தொடர் புடையார்க்கெல்லாம் தான்போகும் அளவும் நோயே ஆவான்” என்கிறது வள்ளுவம் (848). அதனால், தற்காவாள் தனக்கே யன்றிக் குடும்பத்திற்கே நோயாவள் அல்லளோ!
தற்கொண்டான் பேணல்
தற்கொண்ட ானாகிய கணவனைப் பேணல் மனைவி கடமையோ? தன் தந்தையையும் தாயையும் தன் துணையையும் பேணிக் கொள்வதையே தன் தலைமையான கட மையாக மேற் கொண்ட (41) கணவனைப் பேணுதல் மனைவிக்கு வேண்டுமா என்பதே வினாவாகாது.
ஆக்கி வைக்கப்பட்ட சோறு கறிகள்தாம். அவரவர் அள்ளிப் போட்டுக் கொண்டு உண்ணலாகாதோ? மனைவியே பரிமாற வேண்டும் என்பது நிலை ஆணையா? ஏன், அவன் அவளுக்கும், அவள் அவனுக்கும் பரிமாறி உடனிருந்து உண்டு பார்க்கட்டுமே! அவ்வின்பம் அன்றோ இன்பம்! இருவர்க்கும் பிறந்த நாள் உண்டே! அவள் பிறந்த நாளுக்கு அவன் எண்ணி எண்ணித் துணி எடுத்தலும், அவன் பிறந்த நாளுக்கு அவள் கருதிக் கருதிக் துணி எடுத்தலும் கொண்டால், அவ்வின்பத்திற்கு இணை உண்டா? அவரவர்க்கு அவரவரே எடுத்துக் கொள்ளு தலில் அத்தகு இன்பம் காண இயலுமா?
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது என்ன? ஊரவர் அனைவர் வளர்ப்பும் அப்பிள்ளைக்கு உண்டு என்பதுதானே! தற்கொண்டானைப் பேணுவாள் எவளும், அதனினும் மேலாகத் தான் பேணப் படுகிறாள் என்பதே உண்மையாம்.