திருக்குறள் ஆராய்ச்சி
―
1
ந் நாற்பண்புகளையும் ஒருங்கே சொல்வது, "தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலான் பெண்'
என்பது.
புகழ்ப் பேறு
87
(56)
கூறப்பட்ட ஒன்பான் இயல்புகளாலும் எய்தும் திரட்டுப் பொருள் புகழாகும். புகழ் என்பது குடும்ப வாழ்வால் அடையும் நிறைபயன். ஆதலால், இல்லறத்தின் நிறைவில் ‘புகழ்’ அதிகாரம் ம் பெற்றதாகும். அதற்கு மேற்பட்ட நிலை புகழும் கருதாத் தொண்டுப் பெரு நிலையாகும்.
IL
டம்
இல்லறத்தின் நிறைபயன் ஆகிய புகழ் எவர் வழியால் குடும்பத்துக்கு நிலைபெறல் வேண்டும் எனின் மனைவி வழியே என்பது வள்ளுவம்.
எவ்வளவு புகழாளனாக எனினும் கணவன் இருக்கட்டுமே. அவனை ஊரவர் புகழாளனாகக் கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும் எனின், அவன் மனைவியிடம் புகழ் நிலை அமைந் திருத்தல் வேண்டும். இல்லாவிடின், அவன் கொண்ட புகழும் கொண்டபுகழ் ஆகாது, அவன் நண்பர் அன்பர் பகைவர் அயலார் எவர்முன்னும் தலைநிமிர்ந்து நடத்தல் முடியாது. அவ்வாறானால், எத்தகைய கணவனையும் நிலைநிமிரச் செய் பவளும் தலைகுனிய வைப்பவளும் மனைவியே ஆவாள் என்பது விளங்கும்.
“புகழ்புரிந்த இல்இல்லோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை
(59)
இருவரும் எல்லா வகைகளாலும் ஒத்த இணையராக ருக்க முடியுமா? அரிதுதான்! அப்படி, ஒத்த இணையராக அமைந்து விட்டால், அதன் சிறப்பே தனிச் சிறப்புத்தான். ‘எம் வாழ்வே நிறை வாழ்வு' என்னும் இன்பப் பெருமிதத்தை, அக்கணவன் மனைவியர்க்கு அஃது உண்டாக்கும்!
இந்நாளில் அறிவியல் உலகால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விதையில்லாக் கொய்யா, விதையில்லா மாதுளை, விதையில்லா முந்திரி என்னும் கனிகளைச் சுவைத்தாற் போன்ற இன்பத்தை அவர்கள் வாழ்வு தரும்.