5. நல்ல பெற்றோராக
'கணவன்' என்றும் ‘மனைவி' என்றும் தனித்தனியே பெயர் பெற்றவர், ஒரு மகவைப்பெற்ற அளவில் ‘பெற்றோர்’ என்னும் பொதுப் பெயரைப் பெறுகின்றனர்.
பெற்றோர்
பெற்றோர் என்பது ஓர் உயர் மதிப்புச் சொல்லாகவே வழங்குகின்றது. அம்மதிப்பை வழங்கும் மகவு, ஆணா பெண்ணா என்பது இல்லை. எம்மகவு ஆயினும், பெருமை தரும் மகவாகவே கொள்ளப்படுகிறது. ஏனெனில், ஒரே ஒரு பெண் மகவைப் பெற்றவரையும், பெற்றோர் என்பது தானே வழக்கு. பெண் மகவு பெற்றார் எனப் பெற்றோர் பெயர் தாராமல் ஒதுக்குவது இல்லையே!
ஆண்
அவை
―
பெண்
சமய அடிப்படையில் சில கருத்துக்கள் வழங்கலாயின. பெண்மைக்குப் பெருமை சேர்க்காதனவாகவும் அமைந்தன. ஆனால், பண்டைத் தமிழுலகம் ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என வேறுபடுத்திப் பெருமை சிறுமை சேர்க்க வில்லை.
66
'இவ்வுலகோர் நன்மைக்காக நீ ஒரு நன்மகனைப் பெற்றாய்" என்று ஒரு மகனைப் பெற்ற தந்தை பாராட்டப் படுகிறான் (பதிற். 74).
குன்றவாணன் ஒருவன், தான் வழிபடு கடவுளை வேண்டிக் கிடந்து பெற்ற ‘எல்வளைக் குறுமகள்' பற்றிய செய்தியையும் அறிகிறோம். இவையன்றித், தாய்வழி, தாய்பாகம், தாய்மொழி, தாய்நாடு என்னும் ஆட்சிகளும், இம் மண் பெண்மைக்குச் செய்த சிறப்பையே காட்டும். அதில் தாழ்வு ஏற்பட்டமை, ஆண்மைத் தன்னலமும் சமயத்துப் புகுந்த நச்சுக் கருத்துக்களின் விளைவுமேயாம்.