உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

93

தருதலோ அப்பெற்றோர் அளவிலோ, அக்குடும்ப அளவிலோ நில்லாமல் உலக அளவுக்கு விரியும் பெருமையுடையது. ஆதலால்,

“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற”

என்றார். இதனால் நன்மக்களைப் பெற்றோர் பெருமையையும் அம்மக்கள் பயனையும் திருவள்ளுவர் தெரிவிக்கிறார்.

வள்ளுவர் நோக்கம்

மக்கட்பேறு என்ற அளவில் கூறாமல், ‘நன்மக்கட்பேறு’ என்றும், ‘அறிவறிந்த நன்மக்கட்பேறு' என்றும் வள்ளுவர் கூறியதன் உள்நோக்கைப் பெற்றோர் உணர்தல் வேண்டும்.

நன்முறையில் அமைந்த மக்கள் என்றும், நன்மை விளைக் கும் மக்கள் என்றும் நன்மக்களுக்குப் பொருள் கொள்ளலாம். அந்நன்மை அறிவொடு கூடாக்கால் நன்மை ஆகாது; தீமையும் ஆதல் உண்டு. ஆதலால், ‘அறிவறிந்த நன்மக்கள்' என்றார்.

அறிவு அறிதல்

அறிவு அறிதல் என்பது கற்று அறிதல் மட்டுமா? அவரவர் உணர்வால் கண்டு கொள்ளும் பட்டறிவு மட்டுமா? இவற்றினும் மேலே உண்டா?

அறிவு அறிதல் என்பது இவற்றினும் மேலே விரிந்த பொருளது. அது தன்னை அறிவது. தனக்கு இன்பம் தருவது என்ன, துன்பம் தருவது என்ன என்பதை அறிதல் அது. அவ் வறிதல் முதல்நிலை. அதன் அடுத்த வளர்நிலை இவ்வாறு தானே, பிறர்க்கும் இவற்றால் இன்பமும், துன்பமும் ஏற்படும் என்பதை அறிதல். அதன் முடிநிலை, “எனக்கு இன்பம் தருவதை யானும் பிறர்க்குச் செய்வேன்; எனக்குத் துன்பம் தருவதை யானும் பிறர்க்குச் செய்யேன்” என்னும் உறுதிப்பாடு.

இவற்றை,

“தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்”

(318)

66

“அறிவினாள் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய் போல் போற்றாக் கடை

(315)

என்பவற்றால் கூறினார். ஆதலால் மூளைக் கூர்ப்பும் நெஞ்சக் கூர்ப்பும் ஒருங்கே அமைந்த பேறே, வள்ளுவர் கண்ட ‘அறி