―
திருக்குறள் ஆராய்ச்சி - 1
107
என்று நாம் பாடிக் கொண்டிருக்க, பருந்துக்கு மேலே பருந்தாகப் பாரெல்லாம் கடந்து, அப்பாலுக்கு அப்பாலும் சென்று வரும் வான ஊர்தி காண்கின்றோமே!
L
ம்
தெருவிலே கிடக்கும் எலும்பு, இரும்பு, இலாடம் ஆகிய வற்றைப் பொறுக்கி விற்று அதனால் பிழைத்த இரைட்டு உடன் பிறந்தார் கண்ட கனவும், கொண்ட அடித்தளமும் தானே இம் முன்னேற்றம்! வானூர்தியில் செல்வாரெல்லாம் இரைட்டு உ ன் பிறந்தாரின் பெற்றோர், உற்றார், உறவினர்தாமா?
எடிசனாரின் ஒரு பிறப்பு மட்டும், இருநூற்றுக்கு மேற் பட்ட கண்டு பிடிப்புக்கு ஆட்பட்டு, உலகப் பயன் செய்து வருகின்றதே! இவ்வறிவியல் அறிஞர்கள் மட்டும்தாம் உலகுக் கின்பம் செய்தவரா? இப்படி அத்தனை துறைகளிலும் கட னாற்றி உலகுக்கு நலம் செய்த-செய்து வருகின்ற பெருமக்களால் தானே உலகம் உய்ந்து வருகின்றது! தேன் பதத்திற்குத் துளி போன்றவை இவை.
உருக்கும் செய்தி
தம் அறிவுடைமை தம் பெற்றோரினும் மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்பதை நிலை நாட்டிய ஒருபெருமகனார், தாம் பெற்றோர் நிலையில், தம் ஆருயிர்த் துணையொடும் எப்பாடு பட்டார் என்பதை அவ்வாயிருர்த்துணை எழுத்தாலேயே அறிதல் தகும். இது முழுவதும் அன்று; ஒரு பகுதியே.
ஒருநாள் நாள் தொல்லையுடன் உட்கார்ந்திருக்கையில் எங்கள் வீட்டின் உரிமையாட்டி திடுமென்று தோன்றினாள், ஏற்கனவே அவளுக்கு நாங்கள் இருநூற்றைம்பது பொன் கொடுத்திருந்தோம். அப்படிக் கொடுத்தபோது என்ன ஏற்பாடு என்றால் இனி அவள் எங்களைப் பணம் கேட்கக் கூடாது என்பதும் வீட்டு உரிமைக்காரனுக்குத்தான் நாங்கள் வாடகையைக் கொடுத்து வரவேண்டும் என்பதும் ஆகும்.
ஏனென்றால் அவன் தனக்கே வாடகை சேரவேண்டும் என்று முறை மன்ற ஆணை வாங்கியிருந்தான். ஆனால் அந்தத் தலைவி இவற்றைப் பொருட்படுத்தவில்லை. அவளுக்கு நாங்கள் கொடுக்க வேண்டியிருந்த ஐந்து பொன்னை உடனே கொடுத்தாக வேண்டும் என்று கேட்டாள். உடனே நாங்கள் எப்படிக் கொடுக்க முடியும்?