112
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
மண்வளம் என்று கூறப்படும் ஒன்றில் விளை பொருள்கள் மட்டுமோ? எண்ணெய் வளம், பொன் வயிரம் மணி நிலக்கரி எனக், காலம் காலமாய் உதவக் காத்துக் கிடக்கும் வளங்கள் தாம் எத்தனை?
எனினும் இம்மலைவளம் முதலிய எவற்றிலும் சிறந்த வளமாவது, மக்கள் வளமே என்பதை எண்ணுவார் எவரும் அறிவர். ஏனெனில் வளங்களை எல்லாம், காண்பாரும் கண்டு தருவாரும் மக்களே அல்லரோ!
66
"மக்கள்வளம், மக்கள் வளமேம்பாடு என்பனவெல்லாம் இற்றை அறிவியல் வளத்தால் அறியப்பட்டது' என்னும் எண்ணம் உண்டாதல் இயற்கை. ஆனால், அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றும், “ஊனுடம்பு ஆலயம் என்றும் கண்ட இம் மண்ணுக்கு இது புதுமை இல்லை.
மண்வளம் மக்கள் வளமே!
து
சங்க காலத்து வாழ்ந்த ஒளவையார், நிலத்தை முன் னிலைப்பத்தி, “நிலமே, நீ ஒன்றில் நாடாக உள்ளாய் (மருதம்); நீ ஒன்றில் மேடாக உள்ளாய் (குறிஞ்சி); நீ ஒன்றில் பள்ளமாக உள்ளாய் (நெய்தல்); எவ்வாறாயினும், எவ்விடத்தில் வினை யாற்றல் மிக்க நல்லவர் உள்ளாரோ அவ்விடத்தில் நீயும் நல்லதாக உள்ளாய்! @ உனக்கென ஒரு நன்மை உடையை அல்லை” என்றார் (புறம். 187) மண்ணுக்குச் சொல்லிய இது, கடலுக்கும் தகுவதேயாம்.
மாந்தர் வளம் இல்லாத மண்வளம், வளமன்று என்பதே இதன் திரட்டுப் பொருளாம். இதன் உள்ளீட்டை எழுதும் பழைய உரையாசிரியர், “தீய நிலனேயாயினும் நல்லோர் உறையின் நன்றெனவும், நல்ல நிலனே யாயினும் தீயோர் உறையின் தீது எனவும், தன்னிடத்து வாழ்வோர் இயல்பல்லது தனக்கென ஓரியல்பு உடையது அன்றென நிலத்தை இழித்துக் கூறுவது போல உலகத்து இயற்கை கூறிய வாறாயிற்று" என்கிறார்.
குடும்ப அளவு
மக்கள்வளம், முதற்கண் குடும்ப அளவில் வெளிப்பட வேண்டும். அது, அறிவு தந்து ஆளாக்கிவிட்ட தந்தையார் ஆகிய பெற்றோர் ஏற்றும் மகிழ்ந்தும் பாராட்டும் சீர்முத்திரையைப் பெறுதல் வேண்டும்! வீட்டுக்கு விளங்காத பிள்ளை நாட்டுக்கு விளங்கவா செய்யும்?