உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

பண்பு ஒப்பு

இளங்குமரனார் தமிழ்வளம் 6

உலகம் நானூறு கோடி மக்களைத் தாண்டிவிட்டது. அம்மக்கள் அனைவருக்கும் தலை ஒன்றே. இருதலையராகப் பிறப்பார் அரியர். அவ்வாறு பிறப்பினும் உயிரோடு இருப்பார் அரியர். சயாமிய இரட்டையர்தாம் உலக வியப்பு இரட்டையர். இடுப்புப் பகுதியில் பிரிக்க முடியாத் தசை ஒட்டுடன் பிறந்து இருபது அகவையை ஒட்டி வாழ்ந்து ஒன்றாக இறந்தவர்.

கால்கள், கைகள், விரல்கள், விரல் நகங்கள் முதலிய உறுப்பு களும் உலகத்து மாந்தர்க்கெல்லாம் ஓரொப்பே. உலகாட்சியை ஒருகாலத்துக் கொண்டிருந்த ஆங்கிலர்க்கு மட்டும் மூன்று கை என்றாகி விடவில்லை! அமெரிக்கரால் தீரா அடிமையராகக் கொள்ளப்பட்ட நீகிரோவர்க்கு ஒருகை என்றாகி இருக்கவுமில்லை!

உலக மாந்தர் பிறப்பு அனைத்தும் ஒத்த பிறப்புகளே; ஒத்த உறுப்புகளே! இவ்வொத்த பிறப்பும் ஒத்த உறுப்புகளும் உடைமையால் ஒத்த பண்புடையவர்கள் எனப்படுகின்றனரா?

பிறப்பு உறுப்பு ஒப்புகளினும் மக்களுக்கு உயர்ந்ததோர் ஒப்பு உண்டு; அது பண்பு ஒப்பு; அவ்வொப்பு இல்லாமையே உலக அலைக்கழிவுக்கும், சீரழிவுக்கும் அடிப்படை!

ரினத்தை

பண்பு ஒப்பு இருக்குமானால், ஓரினம் அடிமைப் படுத்த நினைக்குமா? தோளில் ஏறியமலர்ந்து சங்கை நெரிக்குமா? 'நீ தாழ்ச்சி; நான் உயர்ச்சி' எனப் பகுத்துப் பேச வருமா? எளிமை கண்டு இரங்குதல் இல்லாமல் ஏறி மிதிக்க முந்துமா?

“பணிவுடையன் இன்சொலனாதல் ஒருவற்குஅணி”

என்றது தமிழ் மண் (திருக். 95).

எதிரே நடந்து வந்த எளியவன்தன் தொப்பியை எடுத்து, தலை தாழ்ந்து வணங்குவதைக் கண்டு, குதிரை மேல் வந்த இலிங்கன் கீழே இறங்கித் தன் தொப்பியை எடுத்துத் தாழ்ந்து வணங்கி விடை பெற்றுச் சென்றதைக் கண்டது அமெரிக்க மண்!

து பண்பொப்பு அன்றோ!

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்”

என்றது தமிழ் மண் (திருக். 260)