130
நாணம்
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
மாந்தர், நிலை தாழாமை வேண்டும் என்ற வள்ளுவர் மாந்தர்க்கே உரிய சிறப்பியல் தன்மை ஒன்றையும் வலியுறுத்து கிறார்.
அவை அ
உயிர்களுக்கெல்லாம் பொதுவான தன்மைகள் சில உள. வ உணவு, உடற் போர்வை, தங்கிடம், கூடிமகிழல் ன்னவை. ஆனால் ஆனால் இவற்றோடு மாந்தர்க்கே சிறப்பான ஓரியல்பு 'நாணம்' என்பது ஆகும்.
பெண்டிர்க்கு இயல்பாக அமைந்த நாணத்திலும் இந்த நாணம் வேறுபட்டது. அது பழிச் செயல்களைச் செய்தற்கு நாணும் நாணுதலாகும்.
களவு செய்தான் ஒருவன்; பிடிபட்டான்; ஊர்மன்றத்தின் இடையே நிறுத்தப்பட்டான்; தலை கவிழ்ந்து நின்ற அவன், தன் காலால் நிலத்தைக் கீறிக் கொண்டு இருந்தான் எனக் கலித் தொகை காட்டும்.
பழிக்கு அஞ்சி நாணுதல் மாந்தர்க்கே சிறப்பியல்! உரிமை இல்லா வீட்டின் உள் நுழைந்து உண்ட நாய், வீட்டுக்காரரால் காணப்பட்டு, வெருட்டப்பட்டாலும் பின்னர் அவரைக் காணும் போது அவர்க்கு நாணித் தலைகுனிதல் இல்லை!
66
ன்னார் மகனா இது செய்தாய்?! எத்தகைய பெரு மக்கள் உன் பெற்றோர்” என்னும் போது உண்டாகும் தலைக் கவிழ்வு, ஒரு மாட்டுக்கோ, ஒரு யானைக்கோ உண்டாவது இல்லை!
னனில் அது நாணம் கொள்ளுதல் இல்லாப் பிறவி மட்டுமன்று. நாணம் அதனிடம் இருக்கும் எனவும், இருக்க வேண்டும் எனவும் எதிர்நோக்குதலும் இல்லாப் பிறவி!
நானும் பிறவி பிறந்தவன் மாந்தன்! மாந்தனாகப் பிறந்தும், நாணத் தக்கவற்றுக்கு நாணான் எனின், மாந்தப் பிறவியன் ஆகான். பிறர் நாணத் தக்கதைத் தான் நாணான் என்றால், அவனைக் கண்டு அறமே நாணத் தக்கது உடைத்து என்றும்,
நாணம் ம் இல்லாமல் ஒருவன் இயங்குவதற்கும், கயிற்றால் இயக்கப்படும் பாவை பொம்மை முதலியவை உயிருடையவை போல இயங்குவதற்கும் என்ன வேற்றுமை? எதுவும் இல்லை என்றும் வள்ளுவர் கூறுவார். (1018, 1020)