134
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
மக்களை நோக்கி, வாழவேண்டிய கட்டாய முடையவள் அவ் வறிய தாய்! அவள் நிலை தில்லி மருத்துவ மனையில் இருந்து, உதவுவார் உண்டோ?' என ஓர் அறிக்கையாய் இதழ்களில் வருகின்றது. பம்பாய் மாநகரைச் சேர்ந்த ஒரு வறிய இளைஞன்! வேலை தேடிக் கொண்டிருப்பவன். அவ்வறிக்கை கண்டான். தில்லிக்குச் சென்றான்.
குருதிப் பொருத்தம் இருந்தது. தன் சிறு நீரகத்துள் ஒன்றை வழங்கினான். அவன் பெருந்தகை கண்ட மருத்துவ மனையர், அவனுக்கொரு தொகை வழங்க முன் வந்தனர். “தான் எவ்வகை மாற்றுதவியையும் நோக்கி இதனை வழங்கவில்லை” என்றும் "வறிய அத்தாயின் வாழ்வு அவள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்னும் பரிவே தேடிவரக் காரணம்” என்றும் கூறி உதவி பெற மறுத்து விட்டான்!
66
வ
அன்புடையார் என்பும் உரியர் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
ட
குருதிக் கொடை வழங்குதல், கண்பாவை வழங்குதல் என்பன வெல்லாம் இவ்வகை தாமே!
என்பும் உரியர் என்றமையால் மற்றவற்றில் அவர் உரியராக இருத்தல் விளக்க வேண்டுவதில்லையாம்.
அன்பின் வெளிப்பாடு எத்தகையது? அதன் வெளிப்பாடு உள்ளங் கொள்ளை கொள்வது; வயப்படுத்தி விடுவது. அண்ணாவின் கண்டிப்பால் வயப்படாத இராமலிங்கத்தை, வள்ளலார் ஆக்கியது அண்ணியாரின் அன்புக் கண்ணீர்!
அன்புடையார் முகம், மலர்ந்திருக்கும். மலர்ச்சியின்றி இறுகி இருக்கும் முகம், வன்பின் அடையாளம். பூத்த பூவெனக் கரவற்று மலர்ச்சியுடன் விளங்குவது அன்பின் இருக்கை! அம்மலர் இருக்கையில் இருந்து வெளிப்படுவது, இன்சொல் ஆகிய தேன்! தேனினிமை வேண்டாதவை எவை? வேண்டார் தாம் எவர்? அதுவே விருந்தோம்பல்!
விருந்தோம்பல்
விருந்தோம்பல் என்பது உலக நன்மக்கள் அனைவர் உள்ளகத்தும் பிறந்து, இன்றும் சிறக்கும் பண்பாடே! அதனைத் தனியொரு மண்ணோ, இனமோ தன்னுரிமை கொண்டாட முடியாப் பண்பு. அவரவர் நிலையால் விருந்தோம்பல் உல