―
திருக்குறள் ஆராய்ச்சி - 1
141
தலையையும் உள்ளே சுருக்கிக்கொண்டு வட்டக்கல்லென- மூடிச்சட்டியெனக் காட்சி தரும் அமைப்பு என்ன!
ஆயிரங்காலி, தொட்டாற்சுருங்கி, நத்தை, சுருட்டைப் பூச்சி, கூம்பும் மலர், எனப்பல உவமை கூறத் தக்கன எனினும், அடக்கத்திற்கு ஆமை போலும் ஒன்று சொல்லுதல் அரிதேயாம். ஐந்துறுப்புகளையும் அடக்குதற்கு, அதுவும் ஐந்துறுப்புகளை ள அடக்கிக் கொள்ளும் சான்று ஆகிவிடுகின்றதே. அதனை,
66
'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து
என்றார் வள்ளுவர்.
99
(126)
ஓர் ஓட்டுள் தன் ஐந்துறுப்புகளையும் அடக்கும் ஆமையைப் போல, ஒருவர் தம் ஐம்பொறிகளையும் அடக்கும் திறம் பெற் றால் அஃது எக்காலத்திற்கும் பாதுகாப்பாகும் என்கிறார்.
ஐந்தும் காக்க வேண்டும். அவற்றுள்ளும் தவறாமல் காக்க வேண்டியது நாவே. அதனைக் காவாமல் இருந்தால் துன்பத்தை அடையாமல் தீரவே தீராது.
கண்!
உள்வாங்கும் பொறி; அது தவறும்போது வேண்டாத காட்சியை உள்வாங்கிக் கேடு செய்யும். ஆனால் அதனை உடனே வெளிப்படாமல் காக்கவும், வெளிப்படினும் வேறு சொல்லி மறைக்கவும் கூடும்.
காதும் - மூக்கும் - மெய்யும், கண் போலவே உள்வாங்கும் பொறிகளே. அத்தீமையும் உள்வாங்கிக் கொள்ளப்படுவனவே. ஆனால் நாவு அத்தகைத்தா?
நாக்கு வெளித் தள்ளும் பொறி. அது சொல்லும் சொல், பல்லக்கும் ஏற்றும்; பல்லை உடைக்கவும் ஏவும். பன்னீர் தெளிக்கவும் செய்யும். செந்நீர் வடியச் செய்யவும் தூண்டும். மதிக்கவும் மிதிக்கவுமாம் இரண்டையும் தன்னில் கொண்டிருக்கும். அதனைச் செவ்வையாகக் காத்தலே சிறந்த அடக்கத்துள் அடக்கம் எனப் பிரித்துக் கூறினார் வள்ளுவர்.
“யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”
என்பது அது (127).
ஏன் அதனைக் காக்க வேண்டும்? வள்ளுவரே கூறினார். ஒருவன் சொல்லும் பல்லாயிரம் சொற்களிலும் ஒரே ஒரு சொல்