―
திருக்குறள் ஆராய்ச்சி 1
143
குடிப்பெருமை ஒழுக்கத்தைச் சார்ந்தது சார்ந்தது எனவும், ழுக்கமே உயர்வு எனவும், கல்வி மேம்பாட்டினும் ஒழுக்க மேம்பாடே போற்றத் தக்கது எனவும், நன்மைக்கும் தீமைக்கும் மூலங்கள் நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்பனவே எனவும் தெளிவாக்கினார் வள்ளுவர்.
ஒழுக்கத்தின் நிறைவில்,
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்'
என்றார் (140).
ஒழுக்கம் இது என்பதற்கு
ளவை' எது? ஒழுக்கம்
என்பதற்குரிய அளவை உயர்ந்தோர் நடையும், அவர்கள் இயற்றிய நூல்களும் என்கிறார் திருவள்ளுவர்.
ஒழுகுவதைப் பின்பற்றி ஒழுகி வளர்ந்ததுதானே உலகம்! ஆதலால் ஒழுக்கமுடையவரைப் பின்பற்றி நடப்பதே ஒழுக்கம் என வரம்பு காட்டினார்.
ஒழுக்கம் இருபால் பட்டவை. அவை அகவொழுக்கம், புறவொழுக்கம் என்பன. அகவொழுக்கம் பண்பாடாகத் திகழும். புறவொழுக்கம் நாகரிகமாக விளங்கும். இரண்டும் ஒன்றாக நாகரிகப் பெயர் பெறும் நிலையும் உண்டு; பண்பாட்டுப் பெயர் பெறும் நிலையும் உண்டு. ஆன்றோர் என்பதும் சான்றோர் என்பதும் வேறு வேறு பொருள்வழி வந்தவை. ஆனால், ஒரு வழிப்பட்டவை போல இந்நாளில் வழங்கப்பட்டு விட
வில்லையா, அதுபோல்!
நம் ஊரில் ஒருவர் நம்மைக் காணவரும்போது நாக்கைத் துருத்திக் காட்டினால் என்ன நினைப்பார்? என்ன நினைப்பார் என்ன, ‘என்ன செய்வார்?' என்றே கேட்க வேண்டும். ஆனால், திபேத்தில் நாக்கைக் காட்டி நீட்டுதல் மதிப்பு மிக்க வரவேற்பு என்பர்.
ல
நாம் வெற்றிலை வைத்தால் பகை மறந்து நட்புக் கொள்வோம் என்றோ, மங்கல விழாவுக்கு வரவேண்டும் என்றோ, உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன் என்றோ கொள்ளுதல் இயற்கை. ஆனால், வெற்றிலை வைத்தால் சண்டைக்கு அழைப்பதாகப் பொருளாம் சீக்கியரிடத்தே.
ள
மங்கல அணியைக் களைவது மட்டுமின்றி எவ்வணியும் களைந்து விடல் கைம்மையர்க்கு இந்நாடு வழங்கும் பரிசு.