148
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
'என்னிடம் இல்லை' என்றால் என்ன செய்ய வேண்டும்? இருப்பவனிடம் இருப்பதை எடுத்துக் கொள்ள நினைப்பதா அதற்கு வழி? தன்னடக்கம் உடைய எவனும், தன்னறிவு உடைய எவனும் செய்யும் செயலா இது?
66
'இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்” (174)
“அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்” (175)
இல்லான்தான் 'இல்லை' என்று பிறன் தேடியதைக் கவர விரும்புகின்றானா? இருப்பவனும் அதனைச் ம்
செய்வது
ல்லையா? உள்ள செல்வமும் போகாமல் இருக்க வேண்டு மானால் பிறன் பொருளைக் கவர விருப்பம் கொள்ளாதிருத்தல் வேண்டும்.
L
66
'அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் (178)
அஃகாமை-குறையாமை
புறங்கூறாமை
புறங்கூறுதல் என்பது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் கூறுதல்; நல்லது கூறுதல் எவ்வளவு பெருமை சேர்க்குமோ அவ்வளவுக்கு எதி ரிடையான பழி சேர்பபது இப்புறங் கூறுதல்.
கோள் சொல்லுதல் என்பது இதுவே. ஓரிடத்து உள்ளதைக் கொண்டுபோய் ஓரிடத்துச் சொல்லுதல் கோள் ஆகும்.
66
புறங் கூறுதல் கோழையின் செயல். நேரில் சொல்லும் நேர்மையோ துணிவோ இருப்பவன் புறங்கூறான். அதனால் அறங்கூறாதவனாக இருந்தாலும் இருந்து போகட்டும்; அல்லவை செய்வானாக இருந்தாலும் இருந்து போகட்டும்; புறங் கூறாதவனாகவேனும் இருப்பது நல்லது” என்றார் திரு வள்ளுவர். (181)
பிறனைப் பழித்துப் புறங் கூறுகிறானே; இவன் என்ன பழியற்றவனா? இவன் புறங் கூறுதலே தீய பழிதானே! இவன் பழிகளைப் பிறர் கூற மாட்டார்கள் என எண்ணிக் கொண் டானோ இவன்? இவன் செய்யும் பெரிய பழிகளைத் தேடித்
L