திருக்குறள் ஆராய்ச்சி 1
―
151
66
‘தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடியுறைந் தற்று"
ஒப்புரவு அறிதல்
(208)
ஒப்புரவு என்பது உழவுத் துறையில் வழங்கப்படும் பண் படுத்தற் சொல். மேடு பள்ளமாக இருக்கும் நிலத்தைச் சமப் படுத்துதல் ஒப்புரவு (ஒப்புரவு) ஆகும். அதனைச் செய்யாவிடின் மேட்டு நிலத்தில் நீர் நில்லாமல் பள்ளத்திற்குச் சாய்ந்து விடும். நிலம் ஒரு நிலைப்படின், நீரும் ஒரு நிலைப்படும். பயிர்களுக்கும் ஒருநிலைப்பட நீரும் உரமும் கிட்டும். விளை பயனும் அவ்வாறே ஒரு நிலைப்பட வாய்க்கும். ஒப்புரவின் இன்றியமையாத் தேவையையும் பயனையும் இவ்வுழவடைச் சொல் இனிது விளக்கும்.
இங்கு வள்ளுவரால் சொல்லப்படும் மழை, ஊருணி நீர், மருந்துமரம், பழமரம் எப்படி உலகுக்கு ஒப்புரவு செய்வனவோ, அவ்வாறே இல்லறம் பேணுவானும் ருத்தல் வேண்டும் என்பது பொதுச் செய்தி.
ஒப்புரவு அறிதலும், அறிந்து போற்றுதலும் அரிது
என்பதை வள்ளுவர் அறிவார். ஆதலால், அவ்வொப்புரவு அறிந்து பேரறிவாளன், நயனுடை பான், பெருந்தகையான், கடனறிகாட்சியவன் என்றெல்லாம்
கடனாற்றுவானைப்
எடுத்துரைத்தார்.
ஒப்புரவு அறிபவனே உயிர் வாழ்பவன்; அவனுக்கு வறுமை என்பது, அவன் செய்ய விரும்பிய உதவிகளைப் பிறர்க்குச் செய்ய முடியாமையே என விளக்கம் தருகிறார்.
ஒப்புரவு செய்தலால் ஒருவனுக்குக் கேடும் வருமோ? வாராது; வரும் எனின் அக்கேட்டைத் தன்னை விற்றுக்கூட வாங்கிக் கொள்ளும் பெருமை உடையது என்கிறார் (220).
உள்ளாரும் இல்லாருமாய், இருபால் பட்டுக் கிடக்கும் உலகில், 'எல்லோரும் உள்ளாராய் இருக்கும் நிலையே உய் வாகும் நிலை' என்பதைத் தம் கூர்த்த அறிவாலும், பேரார்ந்த நெஞ்சாலும் கண்டு கொண்டதால்தான், 'ஒப்புரவறிதல்' வள்ளுவம் அன்றே பிறந்ததாம். இல்வாழ்வின் நிறைவு அவ் வொப்புரவுக்கு வழிகோலுவதாக அமைதல் வேண்டும் என்பது வள்ளுவ நெஞ்சமாகும்.