166
இளங்குமரனார் தமிழ்வளம் 6
―
வள்ளுவர்தம் அருள் நெஞ்சப் புலப்பாடு அது என உணர்வார் வேறுபாடாகக் கொள்ளார்.
"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று”
என்பது அது (323).
பொய்யால் பழியும் கேடும் உண்டாதல் மெய்யே. ஆனால் காலையொடு நோக்கின் அப் பழியும் கேடும் குன்றுதல் வெளிப்படும்.
சில குழல்களில் பொய்யால் கொலைப்பாடும் நேர்தல் கூடும். எல்லாப் பொய்களும் அத்தீமை செய்வன அல்ல. புண்படுத்துவன; பகையாக்குவன; மாசுபடுத்துவன என்றே அமையும். ஆனால் கொலை அத் தகைத்தா?
போன உயிர் போனது தானே, மீளுமா? அவ்வகையால் மீளா வகையில் உயிரைப் போக்கும் கொலையே தீமைகளுள் எல்லாம் தலைப்பட்ட தீமை எனக் கண்டார்.
நன்றி மறத்தலையும் கடுமையாக நன்றி கொல்லுவதாகக் கொள்ளும் வள்ளுவர் உள்ளம், கொலைக் கொடுமைக்கு ணையாக ஒன்றைக் காணாமையால் ஒன்றாக நல்லது கொல்லாமை' என்ற தென்க.
துறவர், கொல்லலாமா? கொல்லவும் நினைக்கலாமா?
துறவோர், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப வேண்டும் பான்மையர். அவர் உடலில் இருந்து உயிரைப் பகுத்துப் பிளக்கும் கொடுமையில் தலைப்படலாமா? வேள்விக்கே எனினும் கொலையை ஏற்கலாமா?
சாதலின் இன்னாதது இல்லை எனச் சாற்றுவது வள்ளுவம். ஓர் உயிர் சாவுங்கால் துடிக்கும் துடியும்; அடிக்கும் அடியும், அரற்றலும் ஆர்ப்பும் கண்ணேரில் கண்டு கூட அக்கொலை செய்ய முந்தும் மனம் கன்மனம்! இரும்பு மனம்! ஆனால் உயிர்க்கு இரங்கும் துறவு மனம் கூட அதனைச் செய்யுமா? செய்யின் அது துறவா? தவமா? நோன்பா?
ஓருயிரியால் தன் உயிர் நீங்கும் நிலையே உண்டு எனினும் அந்நிலையிலும் அவ்வுயிரியைப் போக்காமையே அருளாளன் இயல்பு. ஆதலால்,