168
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
பக்கமாகவும் இரவு ஒருபக்கமாகவும் வாழும் நாளை அறுத்துக் குறைக்கும் வாள்! ஆனால், நிலைபெற்றதுபோல் நம்ப வைத்து விடுகின்றது.
இளமையாக இருந்தவன் மூப்படைகிறான். நாவும் ஓடுங்கு கிறது; விக்கலும் உண்டாகிறது; "நேற்று இருந்தான் இன்று இல்லை” என்று சொல்லுமாறு கண்மூடிக்கண் திறக்குமுன் கண்ணை மூடிவிடுகிறான். கூட்டை விட்டுப் பறவை பறந்து போவதுபோல அவன் உடலை விட்டு உயிர் பறந்து விடுகிறது. உறங்கப் போனவன் உறங்கியே போகிறான். இந்த உடலும் வாழ்வும் நிலையென்று எத்தனை எத்தனை கோட்டைகள் கட்டுகிறான்?
க
Ꮒ
உறுதியாக இன்றைக்கு வாழ்வேன்' என்று எவராவது சொல்லமுடியுமா? சொல்ல முடியாத அவர் அவர் அதனை எண்ணிப் பார்க்கிறாரா? அதனை எண்ணாமல் எத்தனையோ கோடிகளை எண்ணுகிறார்! எண்ணினால் எதை எண்ண வேண்டும்? நிலையற்றதையா? நிலை பெற்றதையா? என் றெல்லாம் சிந்திக்க ஏவுகிறார்.
நிலையாமை என்ன அழுகண்ணித் தனமாக அல்லவோ இருக்கிறது! நம் நம்பிக்கை, செயல் திறம் என்பவற்றையெல்லாம் குறைத்துவிடுமோ என்று தோன்றுவது அறியாமை உடைய
தாகும்.
செல்லும் வழியில் காட்டாறு உண்டு; கள்வர் அச்சம் உண்டு; கடுவிலங்கு உண்டு; என்று ஒருவர் உரைத்தால் போகாதே என்பது பொருளன்று. “விழிப்பாகப் போ! வேண்டும் காப்புடன் போ" என்பதே பொருள்.
நில்லாமையைச் சொல்வதே நிலையானதைச் செய் என்பதற்கே ஆகும். 'நாளை இருப்பதை அறியோம்' என்றால் எதனையும் நாளை எனத் தள்ளிப் போடாதே! உடனே செய்து விடு என்பதே பொருள்.
நிலையாமையை இல்வாழ்வில் புகுவானுக்கா சொன்னார் வள்ளுவர்! அவன் பெற்ற மழலைச் செல்வங்களுக்கா சொன்னார்? அவன், செய்வன செய்து அறிவன அறிந்து வாழ்வு இன்னது என்பதைத் தானே அறிந்து கொண்டுள்ள பக்குவ நிலைக்கு வந்துள்ளான் எனக்கண்ட பின்னர்த் தானே அவனுக்குச் சொல்கிறார். இல்லையானால் அவன் வளர்ந்தவன் ஆவானா?