170
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
சொல்கிறார். “நான் உட்கார்ந்து கொள்கிறேன்; என்னைச் சுற்றிலும் தலை மறைக்கும் அளவுக்கு இனிப்பு வகைகளை அடுக்குங்கள்! ஒரு விரலால் தொட்டுத் நானும் நாவில் வைக்கி றேனா? பாருங்கள். எனக்கு இனிப்பு நோயும் இல்லை” என்கிறார்.
பற்றற்ற தன்மை வெளியேயா இருக்கிறது. நெஞ்சில் அல்லவோ உள்ளது! ‘யாகாவார் ஆயினும் நாகாக்க' என்னும் வள்ளுவம் சொல்லுக்கு மட்டுமன்று; சுவைக்கும் பொருந்துவதே யாகும்.
.
லை ல உண்கலமாகப் பயன்படுகிறது. அதனைக் கிழி யாமல் பேணுகிறோம்; அழுக்கை நன்கு துடைத்துக் கழுவு கிறோம். உண்டு முடிந்ததும் எடுத்து எறிகிறோம்! அப்படிப் பட்டது தானே உடலும்! உயிருள்ளவரை போற்றிக் கொள்ளப் படும் உடல், உயிர் போகிய பின்னர் அடையும் நிலை அது தானே! இத் தெளிவுடையவர்க்கு உடலும் உரிய பயன் செய்த பின் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றே என்னும் முடிவு தோன்றி விடத்தானே செய்யும்?
“மற்றும் தொடர்ப்பா டெவன்கொல்? பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை”
(345)
உடம்பும் மிகை' என்னும் முதிர் வாளர்க்கு 'யான்' என்னும் ‘தற்பற்றோ' எனது என்னும் ‘பொருட் பற்றோ' தலை காட்ட முடியுமா? (346).
பற்றற்றார்க்கே துன்பம் பற்றுதல் இல்லை என்னும் தேர்ச்சியுடையார் (347), அந்நிலை, தம்மை விட்டு அகலாமல் இருக்க ஒரு வழி தேடிக் கொள்ளல் வேண்டும். அது, தம்மினும் வன்மையாகப் பற்றற்ற பெருமக்களைச் சுற்றமாகப் பற்றிக் கொண்டு இருப்பதாகும். இல்லாக்கால் அப்பற்றுதற்கு அசைவு உண்டாயினும் உண்டாதல் கூடும்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
க
மெய்யுணர்தல்:
நிலையாமை கண்டார், பற்றற்றவராவர்! அவர் அந் நிலையில் மெய்யுணர்வாளராகவும் அவா இல்லாதவராகவும் விளங்குவார்.