உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி 1

177

அவ்வுழவன் காடு மற்றொன்று; புன்செய். அதில் பருத்தி பயிரிட்டு இருக்கிறான். சாகின்ற நிலையில் இருந்த பருத்தி, பெய்த மழையால் பூவும் பிஞ்சுமாய்க் காய்த்துக் குலுங்கியது.

ஒரே உழவனின் நல்வினை என்ன? அல்வினை என்ன? நெல் அழிவானேன்? பருத்தி விளைவானேன்? நெல்லுக்கும் பருத்திக் கும் வினை என்ன வினை?

வெள்ளம்

வெள்ளம்; பெருவெள்ளம்; பேய் வெள்ளம்; கடல் நீரெல் லாம் அள்ளிக் கொட்டிய வெள்ளம்; கடல் நீரும் உட்புகுந்த வெள்ளம்; கடற்கரையூர். ஏறிய வெள்ளம் கரை மேல் ஏறியது; ஊரைச் சீறியது; ஆடு, மாடு, கோழி, குஞ்சு ஆகிய எல்லாம் இழுத்தது; ஆண், பெண், குழந்தை பெரியர், பொய்யன் மெய்யன், வஞ்சன், திருடன், அறவன், துறவன் ஆகிய அனை வரையும் விடாமல் இழுத்தது. குடிசைகாரை, மாடம் கூடம், கோயில் குளம், பள்ளி அறச்சாலை ஆகிய எல்லாவற்றையும் அழித்து நிலமட்டம் ஆக்கியது. அதற்கென்ன எவர் வேண்டும்? எது வேண்டும்? எல்லாம் ஒன்றே! எல்லாரும் ஒன்றே.

தீ

ஓரிடத்தே அயர்தியால் பற்றுகிறது தீ. அது பரவத் தக்க படி காற்று வீசுகிறது! கொழுந்து விட்டு மேலே எழுகிறது. அதன் நாவு தாவித் தாவி எரிக்கிறது. எரியின் எரிவுக்கு எவர் நல்வினையர்? எவர் அல்வினையர்? அனைவருக்கும் ஒரு

னையே அது செய்யும். அணைக்கும் அளவுக்கும்-முடிந்த அளவும்-எரித்துத் தீர்க்கும். அதே பொழுதில் காற்று தெற்கே இருந்து வடக்கே தள்ளினால் வடக்குப் பக்கமெல்லாம் பாழ்! வடக்கே இருந்து காற்று தெற்குப் பக்கம் தள்ளினால், தெற்குப் பக்கமெல்லாம் பாழ்! எரிந்த பக்கத்திற்கு எதிர்ப்பக்கம் எல்லாம் நல்லினைப் பக்கமா? எரிந்த பக்கமெல்லாம் அல்வினைப்பக்கமா? பாலம்

அரியலூர்ப் பாலத்தின் மேல் வண்டி வருகிறது; பாலம் சரிகிறது; வண்டி சரிகிறது; பெட்டிகள் சில கீழே வீழ்கின்றன; சில பெட்டிகள் சரியாமல் நின்றன! நின்ற பெட்டியில் இருந்தவர்கள் அனைவரும் அறவோர்களா, நல்வினையாளர்களா? வீழ்ந்த பெட்டியில் இருந்தவர்கள் அனைவரும் மறவோர்களா.

அல்வினையாளர்களா?