கேட்டில் கேடு
―
திருக்குறள் ஆராய்ச்சி 1
179
இயற்கையால் நன்றாகவும் தீதாகவும் ஆகும் ஊழை, ‘ஊழ் னை' என்றும் ‘வினைப் பயன்' என்றும் ‘தலைவிதி’ என்றும் சொல்லிச் சொல்லி மக்களைச் சாய்க்கடைப் புழுவாகச் செய்து, இன்று வரையிலும் அதற்குத் தீர்வு காணவும் எண்ணாத, எண்ணுவதும் பாவம் என்கிற வகையில் செய்த மூளைச் சலவைச் செயல் மறக்கக் கூடியது அன்று; மறுக்கக் கூடியதும் அன்று!
பொருள்
ஊழை உலகத்தியற்கை என்றவர் வள்ளுவர். 'இருவேறு உலகத்து இயற்கை' என்றவரும் வள்ளுவர். மழையைக் காட்டிக், “கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்பாய் மற்றாங்கே, எடுப்பதூஉம் எல்லாம் மழை" என்றவரும் வள்ளுவர். மாந்தர் மயக்கம் நீங்கி நல்லறிவும் நல்லாற்றலும் பெற வேண்டும் என்றே ஊழ்' என்பதோர் அதிகாரத்தை வைத்தவரும் வள்ளுவர்! ஊழ் வைப்பு
உள
ழ் என்பது அறநூலுக்கு இன்றியமையாததா? அன் புடைமை விருந்தோம்பல் இனியவை கூறல் போல இல் வாழ்வுக்கோ, கல்வி கேள்வி அமைச்சு ஒற்று என்றாற் போல அரசு வாழ்வுக்கோ, 'ஊழ்' வேண்டிற்று ஒன்றா? இல்லையே! அஃது அறநெறிப் பாற்பட்ட ஒன்று அன்றே. மாந்தரின் இயற்கை கடந்த இயற்கை அல்லவோ அது?
அறத்துப்பால் இறை வணக்கத்தை அடுத்து வான் சிறப்பு வைத்த வள்ளுவர். அப் பாலின் இறுதியில் ஊழ் வைத்த வைப்பு முறை எண்ணி எண்ணி ஊற்றம் பெறத்தக்க ஒன்றல்லவோ! இறைமை
ஊழியற்கையை இறையோடு தொடர்பு படுத்துவதும், அதனை ஊழ்வினையாக்கி, உயிரிலா அதனை இயக்குவது இறையென்று மயக்குவதும். இறைமைக்கே ஏலாப் பழியாம். காக்கும் இறை, கூண்டோடு பூண்டோடு அற்றுப் போக அழிக்குமா? பெற்ற அன்னை தன் மூளை நிலை சரியாக இருப்பாளே யானால், தன் பிள்ளைக்குச் சிறுதுயர் வரவும் பொறாள். உள்ள பிள்ளைகளிலும்கூட வலுவற்ற குறையுற்ற பிள்ளை எதுவோ அதன் மீதே சற்றே கூடுதலான வாஞ்சையும் வைப்பாள். தான்