உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ்வளம் 6

என்பவை முறையே அமைந்திருந்தால் அல்லாமல் துய்க்க முடியாது.

செல்வத்தைத் ‘திரு’ என்றும் சோம்பலை ‘முகடி' என்றும், காலத்தைக் ‘கூற்று' என்றும் கூறுவது போல் ஊழ் 'வகுத்தான்’ எனப்பட்டதுதாம்.

66

"துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியும் எனின்

99

அடைதற்கு உரியவை எனப்பட்டவையும் கிடைக்க விடாமல் உலகத்து இயற்கை ஒதுக்கி விடுமானால்தான், அதனைத் துய்க்கும் வாய்ப்பு இல்லாதார் பற்றற்ற நிலையைப் பற்றுவர் போலும். (துய்த்தற்கு வாய்ப்புகள் அனைத்தும் இருக்கும்போது துய்க்காமல் பற்றறுதல் அல்லவோ பற்றறுதல்! இவர்நிலை என்னே!)

66

“நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லல் படுவ தெவன்?”

இயற்கை ஆக்கத்தால் நன்மை விளையக் கண்டு நலப்பேறு என மகிழ்பவர், இவ்வியற்கையின் கேட்டால் நன்மையல்லாமை வரும்போது துன்பப்படுவது என்ன அறிவாகுமோ? அறியோம்!

66

'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்"

இயற்கையின் நேர்ச்சியினும் மிக வலியவை என்று சொல்லத் தக்கவை எவை உள்ளன? அதனை எதிரிட்டுத் தடுக்க ஒன்று நினைக்கு முன்னரே அவ்வியற்கை முன்னே வந்து நின்று விடும்.

நாடும் ஊழும்

இவை ஊழதிகாரக் குறளும் பொருளும். ஊழின் ஆக்கமும் அழிவும், நலமும், பொலமும் அறிந்து கொண்டால் இயன்ற வகையால் நன்மையை மிகக் கொள்ளலாம்; தீமையில் இருந்து தப்பலாம். அதனை முற்கூட்டியே அறிதற்கு வல்ல திறவோர் மெய்யுணர்வாளர். அவர் விருப்பு வெறுப்பு என்பவற்றைத் தமக்கெனக் கொள்ளாராய் உலக நலங்கருதிய உயர்ந்தோர். உண்மை உணர்வால் உரம் பெற்றோர் ஆதலால், அவர் வழிகாட்டுதல், வளரும் இல்லறத்தார்க்கும் ஆளும் அரசுக்கும்