உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ்வளம் 6

கை இல்லாளா அவள்? கை இல்லாத ஊழை வென்றாளா

ல்லையா?

இவ்வாண்டு உயர்பள்ளித் தேர்வு எழுதிய ஒரு பிள்ளை. கை இல்லாள்; காலால் எழுதினாள்; காலால் எழுதுவதால் தேர்வுக்குரிய பொழுதில் அரை மணி கூட்டித் தருவதாகத் தேர்வாளர் கூறினர். 'வேண்டா! இரண்டரை மணிப் பொழுதே போதும்!' என்றாள்! அவ்வாறே சிறப்ப எழுதி முடித்தாள்!

இத்தகு சான்றுகளை அடுக்கவேண்டா. இதனைப் படிப் பாரே எண்ணிப் பார்ப்பின் பலப்பல அடுக்கடுக்காக அலையென வரிசையிடுமே.

தெய்வம்

இயற்கைக்குத் தெய்வம் என்பது ஒருபெயர். ஆதலால் ஊழுக்கும் அப்பெயர் உண்டு. 'திங்களைப் போற்றுதும்' 'ஞாயிறு போற்றுதும்' 'மாமழை போற்றுதும்' 'பூம்புகார் போற்றுதும்' என்றவை ஊழியற்கை வழிபாடே! ஏனெனில், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்ற அவரே, ஊழை வெற்றி கொண்டவர் அல்லரோ!

“ஊழால் அல்லது இயற்கை நேர்ச்சியால் வெற்றி கொள்ள முடியாத ஒன்று இருக்குமாயினும் விடாது முயல்க. அம் முயற்சிக்குப் பயன் இல்லாமல் போகாது. இல்லாமல் போகாது. பெரிய பயன் இல்லாமல் போகாது. பெரிய பயன் இல்லை எனினும் உரிய பயன் கிடைத்தே தீரும்” என்னும் முறையால்,

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

என்றார் (619).

ஊழை வெல்லல்

கூலி என்ன கூலி? ஊழையும் வெற்றி கொள்ள முடியும் உலையாதே! அசையாதே? தராதே! ஊக்கமாகச் செயலாற்று! மேலே, மேலே எழுச்சி கொண்டு ஏறு நடையிட்டுச் செயலாற்று! ஊழின் பிடரைப் பிடித்து ஏறி, அதன் முதுகில் அமர்ந்து வெற்றி காணவும் முடியும் என்றார் (620)

66

'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்”

என்பது அது.