―
திருக்குறள் ஆராய்ச்சி 1
203
யாகவும், மணமகள் முதற்கண் அணிந்திருந்த மாலை, நிறைவில் மணமகன் மாலையாகவும் ஒருவர் நெஞ்சம் ஒருவர்க்கு ஆகிக் கூடுவிட்டுக் கூடுபாயும் குறிப்பை விளக்குவது ஆகும்.
11. இடவலம் மாற்றி மணமக்களை அமரச் செய்தல்
மாலை மாற்றிக் கொண்ட மணமக்கள் மணத்தின் போது அமர்ந்திருந்த நிலையை மாற்றி, மணமகள் வலப்பாலாகவும், அவளுக்கு இடப்பால் மணமகனாகவும் அமரச் செய்தல்.
அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் தக்க தக்க வகையில் துணையாக இருத்தல் வேண்டும் என்றும் அதுவே குடும்ப நலமும் வெளி நலமும் ஒருங்கு காக்கும் என்றும் உணர்த்தும் குறிப்பாகும் இது. இதனாலேயே வள்ளுவர், வாழ்க்கைத் துணைவி நலம் என்றோ, வாழ்க்கைத் துணைவன் நலம் என்றோ கூறாமல் ‘வாழ்க்கைத் துணை நலம்' என்றார் என்பது கருதத் தக்கது.
12. வாழ்த்துரைத்தல்
நறுமணப் பூத்தூவி, நறுமணப் புகை பரப்பி, பனிநீர் தெளித்து, தன் நறுஞ் சந்தனம் தந்து வரவேற்கும் மணவிழா வில் வாழ்த்துரைப்போர், தம் சொற்களிலும் இந்நறுமையும், மென்மையும், தண்மையும், தகைமையும் வெளிப்படவும் பல பல கூறாமல் நல்ல சில கூறி, வாழப்புகும் மக்களுக்கு வழி காட்டியாம் பெருந்தக்க நிலையில் வாழ்த்துதல் கடமையாம்.
சுருங்க வாழ்த்தும் பெருமக்கள் எண்ணிக்கையும், ஒரு மூவர்க்கு மேற்படாமல் அமைதல் விழாக் கோலம் சிறக்க உதவும்.
க
நிகழ்ச்சியும் வாழ்த்தும் ஒருமணிப் பொழுதைத் தாண்டா திருத்தலை முறையாகக் கொள்ளின் நிறை நலமாம்.
வாழ்த்து நிறைவில் மும்முறை சொல்ல வேண்டும் குறள்:
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
என்னும் ‘இல்வாழ்க்கை' நிறைவுக் குறளாகும்.