1.
இணைப்பு
இல்லறம் சிறக்க இனிய ஐந்து!
இல்வாழ்க்கை
(துணைவன் துணைவியர் கூடி நடத்தும் குடும்ப வாழ்வு)
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.
இல்லற வாழ்வு வாழ்பவன் என்பவன் இயற்கைத் தொடர் பால் அமைந்த தாய் தந்தை மனைவி ஆகிய மூவர்க்கும் நல் வழியில் நிலைபெற்ற துணை ஆவான்.
ண
41
2.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.
இல்லற வாழ்வு வாழ்பவன் தூய துறவியர்க்கும் உணவுக்கு வழியில்லாமல் இருப்பவர்க்கும் பாதுகாப்பு இல்லாதவர்க்கும் துணையாவான்.
3.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங் கைம்புலத்தா ரோம்பல் தலை.
42.
தெளிந்த அறிவினர், வாழ்வாங்கு வாழ்பவர், விருந்தினர், சுற்றத்தினர், இவர்களைப் பேணும் தான் என்னும் ஐந்திடத் தாரையும் பேணல் இல்வாழ்வான் சிறந்த கடமையாம்.
4. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
43.
ஒருவன் இல்வாழ்க்கை பழிகளுக்கு அஞ்சிப் (பொருள் தேடி அப் பொருளால் வந்த உணவைப்) பகுத்துண்பதைக் கடமையாகக் கொண்டால் அவ் வாழ்வு வாழ்பவனின் வழிகளில் எப்பொழுதும் குறைவுண்டாதல் இல்லை.
44