210
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
வாழ்க்கைத் துணை நலம்
(துணைவன் துணைவியர் ஒருவர்க்குஒருவர் வாழ்வுத் துணையாகும் நல்ல தன்மை)
1. மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
குடும்பத்திற்குத் தக்க நற்குண நற்செயல்கள் உடையவ ளாய்த் தன் கணவன் செல்வத்திற்குத் தக்க அளவில் குடும்பம் நடத்துபவனே சிறந்த மனைவி ஆவாள்.
2.
ல்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
51
மனைவியிடத்து மனைக்குரிய நற்குண நற்செய்கை இல்லை என்றால், அவ்வாழ்க்கை பொருள், கல்வி, பதவி முதலிய எவ் வகையில் சிறப்புடையதாய் இருப்பினும் பயனில்லை.
3. இல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென் இல்லவள் மாணாக் கடை?
52
மனைவி, குடும்பத்திற்கு ஏற்ற குணம் உடையவளாக இருந்தால் அவ்வாழ்வில் இல்லாத நலம் என்ன? (எல்லா நலங்களும் உண்டு). அவள் சிறுமைக் குணம் உடையவளாக இருந்தால் அவ்வாழ்வில் இருப்பது என்ன? (எதுவும்
இல்லை)
4.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள, கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்?
53
கற்பு என்று சொல்லப்படும் உறுதித் தன்மை ஒரு பெண் ணுக்கு உண்டாகப் பெற்றிருந்தால், அப் பெண்ணினும் பெருமைப்படத் தக்கனவாக வேறு எவையும் இல்லை.
5. தெய்வம் தொழாஅள்; கொழுநன் தொழுதெழுவாள்; பெய்யெனப் பெய்யும் மழை.
54
(திருமணத்தின் முன்புதான் தொழுத) தெய்வத்தைத் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாக நினைந்து துயிலெழும் பெண்மகள் பெய் என்ற அளவில் பெய்யும் மழைக்கு ஒப்பானவள் ஆவள்,
55