உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

1

217

செல்வம் நிரம்ப இருக்கும் போதே இருக்கும் வறுமை யாவது, விருந்தினரைப் பேணாத அறியாமையாகும்; இவ் வறியாமை அறிவிலாரிடத்தேதான் உண்டு.

10. மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.

89

மிக மென்மையான அனிச்சப் பூவும் முகர்ந்து பார்த்த அளவில்தான் வாடும். ஆனால், மானமுள்ள விருந்தினரோ, முகம் மாறுபடப் பார்த்த அளவிலேயே வாடிப் போவர்.

இனியவை கூறல்

(இனிய சொற்களைச் சொல்லுதல்)

1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

90

இரக்கம் கலந்ததாய், வஞ்சனை இல்லாததாய் மெய்ப் பொருள் உணர்ந்த பெருமக்கள் வாயில்

சொல்லே இன்சொல்லாகும்.

வாயில் இருந்து வரும்

91

2. அகனமர்ந் தீதலின் நன்றே, முகனமர்ந் தின்சொல னாகப் பெறின்.

ஒருவரைப் பார்த்த அளவில் முகமலர்ந்து இனிய சொற் களைச் சொல்லும் இயல்பை ஒருவன் பெற்றால், அது அக மலர்ந்து கொடுக்கும் கொடையினும் நல்லதாகும்.

3. முகத்தான் அமர்ந்தினிது நோக்கி, அகத்தானாம் இன்சொ லினதே அறம்.

92

முகமும், முகமும் மலர இனிமையாகப் பார்த்து, உள்ளத் தொடு கூடிய இனிய சொற்களைச் சொல்வதே இனியவை கூறும் அறமாகும்.

4.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும், யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

93

எவரிடத்தும் எப்போதும் இன்பம் மிகுவிக்கும் இனிய சொற்களைச் சொல்பவர்க்குத் துன்புறுத்தும் பசிக்கொடுமை இல்லாதொழியும்.

94