240
நட்புச் சிதறல்கள்
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
நட்டார்க்கு நல்லன செய்தல் வேண்டும் என்றும், அதுவும் விரைந்து செய்தல் வேண்டும் என்றும் வினைச் செயல் வகையில் குறிப்பிடுவார் வள்ளுவர் (679) நட்டார்க்குரிய தேவையை நிறை வேற்றலும் நன்மை செய்தலும் வாழ்வோன் கடப்பாடு என்றும் கூறுவார் (908)
உடலுக்கும் -உயிருக்கும் உள்ள நட்பை, மடந்தைக்கும் தனக்கும் உள்ள நட்புக்கு ஒப்பாக வள்ளுவக் காதலன் உரைப்பான் (1122).
வள்ளுவக் காதலி, "கெட்டார்க்கு நட்டார் இல்லை என்பதை அயலார் என்ன, என் நெஞ்சமே காட்டிவிட்டது’ என்று கூறுகிறாள் (1293).
நண்பர்க்குத் துன்பம் உண்டாகுமானால் அத்துன்பந் தீராக் குற்றம் தன் குற்றம் எனச் சால்பு நண்பு கருதும் என்பதையும் வள்ளுவத் தலைவி சுட்டுவாள் (1165).
“உடம்புக்கும்
-
உயிருக்கும் உள்ள நட்பு, கூட்டுக்கும் - குருவிக்கும் உள்ள நட்பு” என்று நிலையாமை கண்ட நெஞ்சம் ஒப்பிட்டுக் காணும் (338).
“பிறரொடு இன்புற உரையாடி நட்புக் கொள்ளும் திறம் அறியாதவரே, பிளவு உண்டாகுமாறு புறம் பேசி உறவாக இருப்பாரையும் பிரிப்பவர்” என்று புறங்கூறாமை அறங் கூறும்
(187).
“பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்"
நட்பு பெரும்பாலும் அகவையொப்பு, அறிவொப்பு, உணர்வொப்பு, இயல் செயல் ஒப்பு என்பவற்றைக் கொண்டது. ஆனால் தம்மினும், பலவகையாலும் சிறந்தவரைத் துணையாகக் கொள்ளல் தளர்ச்சிக்கு உதவும் ஊன்று கோலெனச் சிறக்கும். ஆதலால் பெரியாரைத் துணைக் கோடல் (கொள்ளல்) என்பது ஒவ்வொருவர் வாழ்வுக்கும் இன்றியமையாததாம்.
‘பெரியவர்’ என்பார் அறன் அறிந்தவர்; முதிர்ந்த அறி வினர்; வந்த துயர் தீர்ப்பவர்; வருதுயர் வாராமல் காப்பவர்; தம்மில் பெரியவர்; இடித்துரைக்கும் இயல்பினர்; தகுதியால் உயர்ந்தவர்; தாங்கும் தன்மையர் எனப்படும் பண்பு நலங்களை