உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

இளங்குமரனார் தமிழ்வளம் 6

செய்து குடல் கழுவ விட்டார்! இது தொடர் கதை! அவர் இழந்ததை எல்லாம் கணக்கிட்டால் மனையொன்றெழுப்பி, மனையும் மக்களும் கவலையின்றி வாழ்ந்திருக்க முடியும். பரிசுச் சீட்டு என்னும் பாழுங் குழியை ஆளும் அரசுகளே நடத்தி, வாழும் அறிவிலா ஆட்டு மந்தை மாக்களைக் குழிக்குள் குப்புறத் தள்ளி வரும் கொடுமையை, அறிவுடைய எவரும் பொறுத்துக் கொள்ள முடியாது. இச்சூது பற்றி வள்ளுவர் எவ்வளவு எச்சரிக்கிறார். நல்லதுரைக்கிறார்; தெளிந்துரைக்கிறார்.

பெரிது தேவையாக இருந்து, அரிது தேடும் பொருளை, எளிதில் இழக்கும் இழிவுச் சூதைத், தொழிலாளர் எண்ணியும் பார்க்கலாமா? ‘பரிசுச் சீட்டை ஒழி”, ‘பந்தயத்தை ஒழி’, ‘ஆட்டக் கழகங்களை அகற்று' என்று அவர்கள் அல்லவோ கொடி பிடித்துப் போராட வேண்டும்? அவர்கள் இவற்றைக் கொள்ளக் கூடாது என எடுத்துரைக்கும் நிலை இருப்பதே இழிவுதானே!

"வெற்றியே வருவதாயினும் சூதை விரும்பாதே. சூதில் கொள்ளும் வெற்றி, தூண்டிலில் கோத்த இரும்பு முள்ளை மீன் கௌவிக் கொள்வது போன்றது” என்கிறார்.

தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டுக் கௌவும் மீன், மறைந் திருக்கும் முள்ளுக்குள் சிக்கி உயிரை விட்டு ஒழிகின்றதே! இவ்வுவமையினும் சூதை விளக்க வேறுவமை வேண்டுமா?

"வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று’

99

(931)

ஒன்றை எய்தி நூறை இழக்கும் சூதர்’ என அவரறி யாமைக்கு இரங்கி ஏங்குகிறார் வள்ளுவர். அவர் நன்மை கொண்டு வாழும் நிலையும் உண்டோ எனத் தவிக்கிறார் (932).

சிறுமை பல செய்து சீரழிக்கும் சூது' எனச் சூதினைத் திட்டுகிறார். அதைப் போல் வறுமை தருவது ஒன்றுமில்லை என அழுத்தமாகக் கூறுகிறார் (934).

சூதாடு கருவியும், சூதாடும் இடமும், சூதாடும் திறமுமே, யாம் காணும் முப்பொருள் என்பார்க்கு, எப்பொருளும் இல்லை என்பதைத் திட்டப்படுத்துகிறார்.

சூதர் கஞ்சிக்கும் வழியற்றுப் போவர் என்றும், பொய்யும், புனையும் கொள்வர் என்றும், உடுக்கும், உடையும் இராது என்றும், எல்லாப் பழிக்கும் ஆளாவர் என்றும், தேர்ந்து, தேர்ந்து உரைக்கிறார் (937-939).