உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

இளங்குமரனார் தமிழ்வளம் 6

“உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதிலார்

உடையது உடையரோ மற்று”

(591)

“உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்

(592)

ஊக்கத்தை உறுதியான கைப்பொருளாகக் கொண்டவர் எம்செல்வத்தை இழந்து விட்டேம் என்று வருந்தமாட்டார். (593)

தராத ஊக்க முடையவனை அடைவதற்காக ஆக்கமே வழி கேட்டுத் தானே செல்லும்

“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை

(594).

நீர்ப் பெருக்கின் உயரத்திற்குத் தக்கவாறு தாமரை, அல்லி, குவளை முதலிய நீர்ப் பூக்களின் தண்டும் உயரும். அது போல் மாந்தரின் ஊக்கத்திற்குத் தக்க அளவில் உயர்வும் அமையும் (595) வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு

நினைப்பவற்றை எல்லாம் உயர்ந்தவையாகவே நினைக்க. அந்நினைவு உடனே கூடாது ஒழியினும் விடாது முயல்க; வெற்றி உறுதியாம். (596)

அம்பு உடலில் பட்டுத் தைத்தாலும் அதைத் தாங்கித் தன் கடமையில் சோராது யானை; அது போல் ஊக்க முடையாருக்குத் தடைப்பாடு வரினும் அதற்காகத் தளர மாட்டார் (597)

வாழ்வு என்பதுதான் ஊக்கமில்லானுக்கு இல்ை என்பதா? வளமும் இல்லை! வண்மையாளன் என்னும் புகழ்ப் பேறும் இல்லை. (598))

“உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு”

யானை பரியதுதான்; கூரிய தந்தங்களையுடையதும் தான்; ஆனால் அவ்வுருவும் அவ்வுறுப்பும் இல்லாத புலி தாக்கும் போது என்ன அஞ்சுதல் அஞ்சி ஓடுகின்றது யானை? ஊக்கத்தின் சிறப்பை உரைக்கும் சான்றல்லவோ இது (599)

“பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்