―
திருக்குறள் ஆராய்ச்சி 1
257
குடியை ஆளுந்தன்மையில் குற்றம் உண்டாயினும், அக் குடியில் பிறந்தான் ஒருவன், அக் குடியின் சோம்பலின் ஆட்சியை மாற்றி விடுவன் ஆயின், அக்குற்றம் நீங்கி விடும் (609).
66
'குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்
சோம்பல் இல்லாத சுறுசுறுப்பாளன் ஒருவன்
வ்
லகையே கொள்ளக் கருதினும் கூடுவதேயாகும். முயற்சி அத்தகு சிறப்புடையது (610).
முயற்சி
மடியின்மையை அடுத்துள்ள அதிகாரம் ஆள்வினை உடை மை என்பது. ஆள்வினையாவது முயற்சி.
66
என்னால் செய்து முடிக்க முடியுமா” என்று சோராதே. துணிந்து செயலாற்று. உன் முயற்சி கட்டாயம் வெற்றி தரும் என்கிறார்.
66
'அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்”
என்பது அது (611).
ஓடமாட்டாதவன் ஒருவன்; கால் தடுக்கித் தடுக்கி விழும் அவனுக்குத் துணிவு வந்தது. ஓடுவேன்; ஓடி வெற்றியும் பெறு வேன் எனத் துணிந்தான். பயிற்சியிலும் தொடர்ந்து முனைந் தான். இகழ்ந்தவர்கள் அனைவரும் மூக்கிலே விரல் வைத்து நோக்க, மாவட்ட ஓட்டப் பந்தயத்தில் முதல்வனாக வந்து வெற்றி விருதும் பெற்றான். வெற்றி எங்கே இருந்தது? அவன் உள்ளத் துணிவில் இருந்தது.
இவன் கொன்னல்-திக்கல்' எனப் பலரும் சொல்லப் பட்டான். ஒருநாள் பாருங்கள் நீங்களே இவன் போல் பேச முடியவில்லையே எனப் பேசப் போகிறீர்கள் எனப் பயிற்சியைத் தொடர்ந்தான். நன்றாக விடாமல் தொடர்ந்தான். உலகப் பெரும் பேச்சாளன் ஆனான். அவனே 'தெமாசுதனீசு' என்பான்.
இவர்களுக்கு மட்டுமா இத்திறம்? நாம் எண்ணினாலும் நமக்குள்ளும் இத்திறம் உண்டு. திறமை ஊக்கம் வெற்றி என்பன தனியுடைமைப் பொருள்கள் அல்ல. பொதுவுடைமைப்