உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

263

பொருட்டாகக் கொள்ளவில்லை. தார்க்கோலால் அறைந்தான்! முளைக்கோலையும் பயன்படுத்தினான். விடிவு இல்லை. மூக்குப் பொடியைக் கண்ணில் போட்டான்; இமையை இறுக்கிக் கொண்டது. தீக்குச்சியைக் கொளுத்தி வாலில் வைத்தான். ‘அப்பாடா! எழுந்தது!' அவன் செய்தது கொடுமையே! ஆனால் அது செய்த கொடுமையோ கொடுமையில் கொடுமை!

முன்னைக் குறித்த காளை போல்வாரும் உளர்; பின்னைக் குறித்த காளை போல் வாரும் உளர். திருக்குறள்

66

‘மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து'

எனக் காளையை உவமைப்படுத்திக் கூறுகிறது (624).

தடையுண்டாகிய பொழுதெல்லாம் வலிய காளையைப் போன்ற உறுதியாளனை அடைந்த துன்பம், துன்பப்படுதல் உடையது என்கிறது அது.

துன்பம் ஒன்றாக இல்லை. அடுக்கடுக்காக வந்தாலும் துணிவாளனிடம் அவை துன்பப்பட்டுப் போகும் (625)

துணிவாளர் ஒரு பெருவாய்ப்பைப் பெற்றாலும் பெற்ற தற்காகப் பேருவகை கொள்ள மாட்டார். அதனால் அப் பெருவாய்ப்பை இழக்கும் நிலை உண்டாயினும் அதற்காக இழந்தேம் என்று இரங்கவும் மாட்டார்.

66

“அற்றேம் என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர்"

(626)

உலகில் நமக்கு மட்டுமா துன்பம். துன்பம் என்னும் அம்பு தைக்கவென்றே அமைந்த இலக்கு நம் உடம்பு மட்டுமோ? இல்லை! துன்பம் உலகியல்! துடித்தால் போய் விடாது; வெடித்தால் விலகி விடாது. ஆனால், துணிந்து நிற்பதே அதனைத் தூளாக்கிப் பறத்தும் என்பவர் துன்பத்திற்குக் கலங்க மாட்டார்.

66

இலக்கம் உடம்புஇடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்”

(627)

துன்பம்' இயல்பே என்று தெளிந்தவனும், இன்பம் வேண்டும் என்று எண்ணாதவனும் துன்பப்படுதல் இல்லை!

(628).