266
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
ஆண் ஆயினும் ஆக! பெண் ஆயினும் ஆக! பால் வேறு பாட்டில் ஒன்றும் இல்லை. சில பெண் பிறப்பர் செய்துள்ள செயற்கருஞ் செயல்களை ஆண்பிறப்பர் செய்தலும் அருமை என்பதை உலக வரலாறு காட்டும்! ஆதலால் எவராயினும் அவர்க்கு 'நல்ல ஆண்மை' என்று சொல்லப் படுவது தாம் பிறந்த ‘இல்ல ஆண்மை' மேம்பட்டதாகச் செய்வதே.
“நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
(1026)
போர்க்களம் செல்லும் வீரர் அனைவருமா போரை நேர் எதிரிட்டுத் தாங்குகின்றனர்; தாக்குகின்றனர்; ஓரம் சாரம் நின்று ஒதுங்குவார்; ஓடிப் பின்வாங்குவார்; மண்டியிடுவார்; மறைந் துய்வார் எத்தனை எத்தனை பேர்? அதே போல் இல்லக் களத்தில் உண்டாம் பொறுப்புத் தாங்கும் போரிலும் நேரேற்று நிற்பாரே நிற்பார்! பிறர் ஒதுங்கித் தப்பவும் ஆவர்.
66
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை”
(1027)
குடும்பத்தை மேலுக்குக் கொண்டு வர முயல்வார்க்கு நல் காலம் அல்காலம் என என்ன உண்டும்? சோம்பல் கொண்டும் மானம் கொண்டும் அவர்கள் இருப்பின் குடி
போகும்.
கெட்டும்
“குடிசெய்வார்க் கில்லை பருவம்; மடிசெய்து
மானம் கருதக் கெடும்.’
(1028)
துன்பத்தை வைத்துக் கொள்வதற்கென்றே அமைந்த கலம்
அன்று உடம்பு! துன்பம் இன்பமாகிக் கொழிக்கின்ற நிலையும் வந்தே தீரும்!
“இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ, குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு
(1029)
குடும்பம் என்பது ஓர் ஆலமரம்? அடிமரத்துடன் வீழ்து களும் அதனைத் தாங்கும் கடப்பாடு உடையன. அவ்வாறு தாங்காக்கால் இடுக்கண் எனப்படும் சுழிக்காற்று மோதி அழித்து விடும்.
“இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி
(1030),