உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி

·

13. நல்ல ஆட்சியராக

வள்ளுவர் காலம் முடிமன்னர் ஆட்சிக் காலம். அதனால் மன்னர், அரசன், வேந்தன், இறைவன் என்னும் சொற்களை ஆண்டுள்ளார். ஆனால், அரசும் ஆள்வோரும் என்றும் உள் ளவைதாமே. மன்னன், அரசன், வேந்தன், இறைவன் என்னும் இடங்களில் ஆட்சியாளன், ஆள்வோன் எனப் பொருள் காணின் இற்றை இயல்புக்கு ஒத்ததாகிவிடும்.

1947 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஆட்சிமுறை இன்று இல்லையே! ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட வள்ளுவ ஆட்சி முறை இற்றைக்கு ஏற்குமா? என எண்ணத் தோன்றலாம்.

பார்வை

காலப்பார்வை

-

டப்பார்வை -சூழல் பார்வை - உலகியல் பார்வை என்பவற்றின் எல்லையைக் கடந்து பார்க்கும் நுண்ணிய பார்வையும் சிலர்க்கு உண்டு. அத்தகையர் பார்வை காலக் கட்டுக் கடந்தது; இடக்கட்டு அகன்றது; குழலுக்கு அப்பா லானது; உலகியலுக்கு விரிந்தது. அப் பார்வை பார்த்த பெரு மகனார் வள்ளுவனார் என்பது வாய்மைக் குறளால் நன்கு விளங்கும்.

சங்கத்தார் பெருக உரைத்த பரத்தையிற் பிரிவை அறவே தவிர்த்தவர் வள்ளுவர். பிறர்மனை நயவாமை, வரைவின் மகளிர், பெண் வழிச் சேறல் என்பவற்றையும் உரைத்தவர் அவர். மட்டுண்டு மகிழ்தல், வட்டாடிக் களித்தல் என்பவற்றை விலக்கி ஒழித்தற்காகக், கள்ளுண்ணாமை, சூது ஆகியவற்றை வைத்தவர் அவர். அருள்நெறித் தலைப்பாடுடைய துறவர் கொல்லாமை, புலால் உண்ணாமை என்பவற்றைக் கொள்ள வலியுறுத்தியவரும் அவர். ஆதலால் இந்நூற்றாண்டிலும் எதிர்வரும் நூற்றாண்டு களிலும் கொள்ளத் தக்கனவெல்லாம் அவர்தம் படைப்பில் இடம் பெற்றுளவாம்.