இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழ்மண் தாங்கும் இளங்குமரனார் (கட்டளைக் கலித்துறை)
வாங்கும் மனத்தில் வழியும்
அறிவுநீர் வகைவகையாய்த்
தேங்கும் துறைகள் திறமாய்
உணர்த்தித் திசையனைத்தும்
தாங்கும் தமிழ்மண் பதிப்பகம்
இந்நாள் இளங்குமரர்
ஓங்கும் அறிவுநூல் அனைத்தும்
வழங்கி உயர்ந்ததுவே!
வளவன் பதிப்பகம்,
-செந்தலை ந.கவுதமன்
2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017