―
திருக்குறள் ஆராய்ச்சி 1
39
அருமையான பூங்கா! புதுப்புது மலர்கள் பூத்தெழும் புகழ்ச் சோலை! தென்றல் தவழும் அருவிச் சூழல்! அந்நிலையைக் கல்வி நிலையங்கள் பெறச் செய்வது, ஆசிரியர்களிடத்தே தான் உள்ளது.
நகை, பகை
கடுகடுப்பான முகத்தையுடைய ஆசிரியரை எவரே
விரும்புவார்? கடுகடுத்த முகத்துடன் கடுஞ்சொல்லும் சொல்பவராக இருந்தால் எவரே நெருங்குவார்?
சினம் என்பது என்ன? நகையும் உவகையும் கொல்வது? ஆதலால், நல்லோர் பகையாவது சினமே (304). சினம் என்பது சினந்தோரை மட்டுமோ கெடுக்கும்? சேர்ந்தோரையும் கெடுக் குமே! அவரை நெருங்குவார் எவர்? அவரிடம் கேட்பார் எவர்? கற்பார் எவர்? (306).
தகுதி
பூத்த மலராகக் காட்சி வழங்குதல், ஆசிரியர் அடிப்படைத் தகுதி. புன்முறுவலுடன் தேன் தவழ தேன் இனியவை கூறல் ரண்டாம் தகுதி! கனிவின் உருவாய்க் காட்சி தரல் அடுத்த தகுதி! இத்தகுதிகளை இல்லார் வேறு எவ்வெத்தகுதிகளைப் பெற்றவர் எனினும் மாணவர் மதிப்புக்கும் போற்றுதலுக்கும் ஆட்பட மாட்டார்.
"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்"
என்கிறார் திருவள்ளுவர் (999). ஒருவரோடு ஒருவர் கூடி மகிழும் இன்பத்தை அடையாதவர்க்குப் பகற்பொழுதென்ன பொழுது? அதுவும் இருட்பொழுதேயாம் என எள்ளுகிறார். அளவளாவிப் பழகும் இயல்பு இல்லாத ஒதுங்கியின் வாழ்வோ, கரையில்லாக் குளத்திற்கு வரும் நீர்வரத்துப் போலப் பயனின்றி ஒழிந்து போகும் என்றும் கூறுகிறார் (523). இவை ஆசிரியர்க்கு இன்றி யமையாதவை அல்லவோ!
கண்டிப்பு
ஆசிரியர் என்பார் மாணவரைக் கண்டித்தற்கு உரியர் அல்லரோ எனின், உரியவரேயாம். அவர்க்கு இல்லாத கண்டிப்பு உரிமை எவர்க்கு உண்டு?