―
திருக்குறள் ஆராய்ச்சி 1
41
அடக்கத்தைத் தெய்வ நிலையாகக் கண்டவர் வள்ளுவர் (121). அவ் வடக்கமில்லார் கற்றென்ன? கற்பித்தென்ன? அறி யுடையர் ஆகார்! அவரே அறிவிலிகளுள் அறிவிலி என நொந் துரைத்தது இது.
நல்லாசிரியர்க்குரிய இலக்கணமாக நான்கு உவனம களைக் கூறும் நன்னூல், அவை நிலம், மலை, நிறைகோல், மலர் என்பன.
நிலம், ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல' எனப் பொறுமைக்கு எடுத்துக் காட்டும் திருக்குறள் (151). நிலத்திற்கு வையகம் என்பதொரு பெயர். அது வைத்துள்ள வளத்திற்கு அளவில்லை. அவ்வளம் போலும் அறிவு வளமுடையார் ஆசிரியர் என்பதாம்.
மலை
"நிலையில் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது”
(124)
என்னும் திருக்குறள். அதன் தோற்றம் மட்டுமோ? அசை விலா நிலை மட்டுமோ? அதன் உயர்வென்ன! வளமென்ன! எல்லாம் மலை மாண்பே. அம்மாண்பு ஆசிரிய மாண்பாம்.
நிறைகோல்
“சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி”
(118).
என்னும் திருக்குறள். நடுவு நிலைக்கு முறை மன்றங்களில் இன்று காணும் சின்னந்தானே, நடுவு நிலைக்கு வள்ளுவரால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சுட்டப்படுகிறது! வைப்பார் அளவு காட்டாமல், வைக்கும் பொருள் அளவைத் திட்டத் தெளிவாகக் காட்டும் நிறைகோல், நிறைகோலே! அந்நிறைகோல் போன்ற நடுநிலை போற்றுவார் நல்லாசிரியர்.
மலர்
மலர்வது; மணப்பது; தேன் சொட்டுவது; மங்கலப் பொரு ளாவது; காலத்தில் மலர்வது; பயன் விளைப்பது. தாம் பெற்ற கல்வியை உணர விரித்துரைப்பார், மலர்ந்து மணம் பரப்பும் மலரன்னார் என உடன்பாட்டில் கொள்ளக் கிடப்பது இம் மலர் (650)
இ