உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறும் பேறு

வளம் எங்கே இருக்கிறது?

வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத

இல்லை!

வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்?

டமே

வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும்

இருப்பதை அறியலாம்?

வளத்தின் அளவு என்ன?

வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்!

உளத்தில் வளம் இல்லையானால், உள்ள

வளமும்

உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால்

போதும்!

அவ்வளம் குன்றியளவானால் என்ன?

குன்றத்தனைய வளமானால் என்ன?

தினை அளவானால் என்ன?

பனை அளவானால் என்ன?

வளம் வளமே!

தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்?

கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்?

கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா?