―
திருக்குறள் ஆராய்ச்சி 1
55
என்றபடி என்னைத் தெய்வ நிலைக்கு ஏற்ற வந்த தெய்வம் போலும்! அகம் நோக்கும் இவ்வரிய பயிற்சி நல்லதே! பயிலப், பயிலத் தெளிவாகி விடும் அல்லவோ!
“முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு"
(1274)
செவ்வி
என் உயிர்த்துணையாம் மெல்லியலாளுடன் ஒன்றிக் கலந்து விட்டபின் யான் பெற்ற பயன்கள் ஒன்றா? இரண்டா?
6
யான் எத்தகு செவ்வியன் ஆகியுள்ளேன்! என்னோடு போர்க்கு வந்து போர்க்களத்தில் பட்டவர் பாட்டைக் கேள்விப் பட்டுக், களத்திற்கு வாராதவர்கள் நடுங்கிய நடுக்கம் எத் தகையது என்பதை நன்கு அறிவேன். அத்தகைய கடுமைமிக்க என் குணமெல்லாம் எங்கே ஒழிந்தன? கனிவும், மென்மையும், பணிவும் பற்றும் எப்படித்தான் என்னிடத்துப் புகுந்தன? கல்லைக் கனியாக்கும் கலை என்பது காதல் கலைதானோ?
சொல்லாத அவள் சொல்கிறாளே! அவள் உள்ளத்தைக் கள்ளத்தால் கொள்ளை கொண்டு விட்டேனாமே! அவளே சொல்கிறாளே!
அவள் தன் அசையா நிறை நெஞ்சையும், என் பணிவும் பணிந்த மொழியும் தாம் உடைத்து விட்டனவாமே! என்னிடம் எதிர்பார்ப்பவையா பணிவும், பணிமொழியும்? அதற்கு மூலமாக இருந்தவள் அவள்! முதலாக இருந்தவள் அவள்! முளைத்து வளரச் செய்து முழுமையாக்கி வருபவளும் அவள்! தன்னால் ஆனதை எல்லாம் என்னால் ஆனது என எப்படித் தன் பெருமையையெல்லாம் என்னுள் ஒடுக்கிக் கொள்கிறாள்!
இதோ நறிய சிறிய மலர்! தினைத்தனை உள்ளதோர் பூ! இப்பூவுள்ளும் தேன்! இத்தேனை எடுப்பதற்கும் தேனீ! தும்பி!
எப்படி மெல்லெனப் புகுகின்றன! எப்படி மெல்லிசை பாடிக் கொண்டே உறிஞ்சியால் (சுரும்பு) உறிஞ்சுகின்றன! பூம்பொடியை மெல்லெனத் தன்னோடு கொண்டு சென்று பூவின் இனப் பெருக்கத்திற்கு உதவுகின்றன! பனித்துளிக்கும் பன்மடங்கு சிறிய தேன் துளியையும் எப்படிப் பக்குவமாகக் காண்டு சேர்க்கின்றன! இத்தேனுண்ணிகளின் நுகர்வு நிலைகள் எத்தகைய இருபால் இன்ப நிலைக்களமாகின்றன!