உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம் 6

“மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

99

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

(51)

என்பதில் மனைவியே வாழ்க்கைத் துணை என்பது வெளிப்பட விளங்குகின்றதே என்பார் உளர். அவர், மனைவி தன் கணவனைத் 'துணை' என வழங்குவதை அறிவாராக. அது,

“பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள்”

என்பதாம். ஆதலால், நாம் கொண்டுள்ள

(1234)

-

உலகம்

வன்

கொடுமையாய்க் கொண்டுள்ள - பெண்ணைத் தாழ்த்தும் சிறு மையை, வள்ளுவர் மேல் ஏற்றாமை கடனாம்.

பெண்ணின் பெருமை

என்று

வள்ளுவர் ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள அறத்துப்பாலில் (54) வினா எழுப்பிப் பெருமைப் படுத்தியவர். பொருட்பாலில் ‘பெண்ணே பெருமை உடைத்து' என்று பேசியவர் (907).

இன்பத்துப் பாலில் 'பெண்ணிற் பெருந்தக்கது இல்' என்றவர் (1137).

இவ்வாறு முப்பாலிலும் பெண்ணொடு பெருமை சேர்த்துப் பேசிய பெருமகனார் உள்ளத்தை உணராமல் உரை யாடுதல், ஆய்வோர் முன் அவர்க்குப் பெருமை சேர்க்காது என்பதை உணரார் போலும்! இற்றை இருபதாம் நூற்றாண் டிலும் பெண் பிறப்பை மதியாரே பெருகிக் கிடக்கும் பெரும் பாவ மண்ணில், ஈராயிர ஆண்டுகட்கு முன்னரே பெண்மைக்கு எத்தகைய பெருமை சேர்த்த பெருமகனார் வள்ளுவர். அவர் காலத்து வாழ்ந்தாருள் எந்நாட்டிலேனும் எவரேனும் அவர்க்கு இணையாகப் பெண்ணுக்குப் பெருமை பேசிய ஒருவர் பிறந் தாரா? இருந்தாரா? பேசினாரா? ஆய்ந்து கூறலாமே அதனை? குழந்தை-மனைவி-தாய்

தேனே! பாலே! கண்ணே! மணியே! மயிலே! மானே! என்று தம்மால் கொஞ்சப்பட்ட பெண் குழந்தைதானே, வளர்ந்த பெண்ணாய் ‘மனைவி’ ஆகியிருக்கிறாள்! அகவை முதிர்ந்து ஆளாகிப் பொறுப்பு ஏற்றமையால் இழிவுக்கு ஆளாகி விடு வாளா? இழிவு படுத்தப்பட வேண்டுமா?