திருக்குறள் ஆராய்ச்சி
―
1
71
உள்ளத்தார்
கணவன் உள்ளத்துள் உறைகின்றானாம் (1130). அதனால் தான் வழக்கமாக முன்னே உண்டபடி, வெதும்பும் உணவை உண்ண மாட்டாளாம்; வெப்பமான குடிநீர் எதுவும் பருக மாட்டாளாம். வெப்பம் உண்டால்-பருகினால்-என்னவாம்? நெஞ்சத்தில் அமர்ந்திருக்கும் நேயக் கணவனைச் சுட்டு விடு மாம், இச்சுடு பொருள்கள்! ஆகவே, வெதும்பிய உணவுகளைக் கொள்ள அச்சம் கொள்கின்றாளாம்!
“நெஞ்சத்தார் காத லவராக, வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து”
எதிர்பார்த்தல்
(1128)
கூட்டை விட்டுச் செல்லும் பறவையை, அதன் துணை எவ்வளவு ஆர்வமாக நோக்கியிருக்கிறது. எத்தனை முறை கூட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று, சென்று பார்க்கிறது! வரவேற்புடன் எதிர்பார்த்திருக்கும் இப்பார்வை நிலைதானே, அன்பை விரிய விரிக்கும் அரிய கருவி! அதனை அருமையாக கப் போற்றிக் கொண்டு, தானும் மகிழ்ந்து வெளியே போய் வரும் தன்னவனையும் மகிழச் செய்கிறாள் வள்ளுவ மனைவி.
வீட்டுக்குள் தான் அவன், எவ்வளவு ஆர்வத்தால் அடி வைக்கிறான்! எதிர்பார்த்திருந்தவளுக்கு ஏமாற்றமில்லாமல் இனிய சொற்களைச் சொல்கிறானே, எத்தனை வகையாய்! அவள் அன்புத் தளிர்ப்புக்கு எள்ளத்தனையும் குறையாத அரவணைப்பைச் செய்கின்றானே! அவன் சொல்லும் செயலும், அவளைப் புதியதோர் உலகுக்கு அன்றோ அழைத்துச் செல்கிறது! அப்பொழுது அவள் நினைக்கிறாளே, "என்ன இனிமை; என்ன அன்பு, இனியும் இவர் கடமை கருதிப் பிரிந்து செல்லுதல் உண்டாகுமே! என் செய்வேன்?" என்று ஏங்குகிறாள்! இந்த எதிர்பார்ப்பு, ‘முளை' என்றால், இன்பப் பயிரின் பழுதிலா விளைவு' இவ்வேக்கம் தானே!
பிரிவு
66
'இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு
99
(1052)
இது நாள்வழி அலுவலுக்கோ தொழிலுக்கோ போய் து வரும் பிரிவுதான்! நெட்ட நெடுங்காலப் பிரிவும் அன்று! நெட்ட