80
―
இளங்குமரனார் தமிழ்வளம் 6
ஆனால், அவற்றின் இடையே ஆற்றுப் பெருக்கு அற்றாலும், ஊற்றுப் பெருக்கால் உதவுவார் போல உள்ள, மனைவியரும் இல்லாமல் இல்லை!
அவர்கள், சிக்கனமும் செம்மையும், வருவது நோக்கிச் செய்யும் செய்கையும் பெருவாழ்த்துக் குரியன.
ஒரு குடும்ப அளவில், வளத்தக்க வாழ்வு என்பது பெரிதும் மனைவியைப் பொறுத்ததே. என்னதான் கணவன் இயற்றலும் ஈட்டலும் புரிந்தாலும், காத்தலும் வகுத்தலும் உடையாள் அவன் மனைவியே! அரசுக்குரிய இந்நான்கு பொருளியல் கொள்கைகளும், அறிவறிந்த குடும்பங்களில் இயற்கையான நடைமுறையாக இருப்பதால்தான், குடும்பங்கள் எந்நிலையிலும் தன்னைக் காத்துக் கொண்டு தலைநிமிர்ந்து நிற்கின்றன.
அக்
இனி, 'வளத்தக்க வாழ்வு' என்பது, வருவாய் அளவில் மட்டும் பொருள் பட்டு நிற்கும் சுருக்கம் உடையது அன்று. வளம் அப்பொருள் வளமேயன்றி, மனவளம், கலைவளம், கொடை வளம், அறிவுவளம், தொண்டுவளம், தொழில்வளம், பதவி வளம், நட்புவளம் என இவையும் பிறவும் ஆகிய வளங்களை யெல்லாம் குறிக்கும் வளமுடையதாகும். அவற்றுக்கும் தகத் தன்னை அமைத்துக் கொண்டு இயையும் வாழ்வே, எடுத்துக் காட்டாம் வாழ்வாகும்.
மனைத்தக்க மாண்பு, வளத்தக்க வாழ்வு என்னும் பண்பியில் இரண்டையும் தெரிவிக்கும் வள்ளுவம்;
“மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
‘மனைத்தக்க மாண்பு' என்பது பண்பு. 'மனைமாட்சி' என்பது செயல்திறம். அதாவது குடும்பத்தைச் சிறப்புடன் நடத்தும் செயல்திறம். வீட்டை முழுமையாக நிரப்பிக் காட்ட வேண்டும் என்ற தந்தைக்கு, ஒரு மகன் வைக்கோற் போரால் நிரப்பிக் காட்டியதும், ஒருமகன் ஒளிவிளக்கால் நிரப்பிக் காட்டியதும் ஆகிய, புனைக் கதையைக் கேளார் எவர்? நிரப்புதல் ஒன்றானாலும் நிரப்புவகை எத்தகைய வேறுபாடுடையவை!
வீட்டுத் தூய்மை, சூழல் தூய்மை, கலத்தூய்மை, பொருள் வைப்பு ஒழுங்கு, சமையல் தேர்ச்சி, உரையாட்டு நயம், உரைக்கத் தக்கவை உரைத்து, உரைக்கத் தகாதவை மறைக்கும் திறம்,