உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 7.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

2

11

திருக்குறள் ஆராய்ச்சி – 2

‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்'

பெருஞ்செயலைச் சயலைச் செய்யக் கருதுவோர் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' எனச் செய்யார். 'இந்தப் பூனையும் பால் குடிக் குமா!' என்று எண்ணிக் கொண்டிருக்க எடுத்த செயலைக் கமுக்கமாக முடித்து விடுவர் (485).

முன்னேறித் தாக்க வேண்டிய கடா, பின் வாங்குகிறதே ஏன்? வலுவாக முன்னேறி ஒரே முட்டாக முட்டி வீழ்த்து வதற்காகத்தான் (386).

66

“ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேரும் தகைத்து

காலம் அறிந்த தேர்ச்சியாளர், உடனுக்குடன் தம் உணர்வை வெளிப்படுத்தி விடார், உரிய பொழுதை எதிர் பார்த்து உள்ளத்தே குறிவைத்துக் கொண்டு இருப்பர் (487)

“பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்”

கிடைத்தற்கு அரிய வாய்ப்பான பொழுது கிடைக்கு மானால் அவ்வாய்த்த பொழுதிலேயே செய்தற்கு அரிய செயல் களைச் செய்து முடித்துக் கொள்வர் (489)

“எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல்’

மீனை நோக்கிய கொக்கு எவ்வாறு ஆடாமல் அசை யாமல் ஒரே நோக்கமாக நோக்கி நிற்கிறது! ஆனால் மீன் வரக் கண்டவுடன், எப்படி ஒரே குத்தாகக் குத்தித் தூக்கிக் கொள் கிறது. அதுபோல் அமைதியாக இருக்கும் பொழுது இருந்து, செயலாற்ற வாய்க்கும் போது செயலாற்றி வெற்றி காண வேண்டும் (490)

“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து”

இடனறிதல்

ஒரு பெரியவர்; மிகச் செல்வாக்கானவர், செல்வமும் உடையவர், செல்வத்தினும் பண்பால் மிக மதிக்கப் பட்டவர்.