உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 7.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

7 இளங்குமரனார் தமிழ்வளம்

பல்லாயிரம் பேர் இடையேயும் ஒருவர் தனிச்சிறப்புற்றுச் செயலாற்றும் திறம் பெற்றால் அத்திறம் ஆட்சியாளரின் தலைமை வரைக்கும் சென்று சிறப்பிக்கப் படும். சிறந்த செயல் திறம் அரசின் பாராட்டுக்கும் உரியதாகும் என்பது இது. (665) நினைத்ததை நினைத்தவாறு நிறைவேற்றுவர், நினைப் பவர் உறுதிப்பாட்டில் சிறந்தவராக இருந்தால் (666)

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப்பெறின்”

உருவத்தைக்கண்டு ஒருவரை இகழாமை வேண்டும். அவரிடம் நிரம்பிய திறம் அமைந்து கிடக்கலாம். உருவத்தால் பெரியதேர் உருள வேண்டுமானால் அதற்கு அச்சாணி இல்லாமல் ஓடுமா? அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்பது பழமொழி. அவ்வச்சாணி போன்றவரும் உருவில் சிறியவரும் உளர் (667)

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந் தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து

தெளிவாக ஆராய்ந்து துணிவுடன் மேற்கொண்ட செயலைச் சிறிதும் நடுக்கம் இல்லாமலும், சோர்வு இல்லாமலும் செய்தல் என்பது வினைத்திட்பம் ஆகும்.

66

(668)

“கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல்”

துன்பம் பெரிதாக வரும் என்றாலும் முடிவில் கட்டாயம் இன்பம் உண்டு என்னும் துணிவுடன் எடுத்த செயலைச் செய்தல் வேண்டும் (669)

“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை

99

ஒருவர்க்கு உடல் திட்பம் இருக்கலாம்; பொருள் திட்பம் இருக்கலாம்; அறிவுத் திட்பம் இருக்கலாம்? உறவு, நட்பு ஆகிய திட்பங்களும் இருக்கலாம். ஆனால் வினைத் திட்பம் என்ப தொன்றை இல்லாரை உலகம் விரும்புதல் இல்லை.

துணிவு என்பதொரு சொல். அதன் பொருள் என்ன? ஆயிரம்பேர் கூடிய கூட்டத்தின் முன்னே ஒருவன் அடாவடித் தனம் செய்கின்றான். அத்தனை பேர்களும் வாய்மூடிக் கிடக் கின்றனர். நமக்கேன் என்று நழூவப் பார்க்கின்றனர். ஆனால்