உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 7.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம்

7

நீர், தேக்கக் கேட்டினும் கேடாவது, பொருள் தேக்கக் கேடு. அது பற்றுள்ளம் என்றும், கருமித்தனம் என்றும் சொல்லப்படும் வடிகட்டிய இறுக்கத்தின் செயற்பாடாகும். அதனைப் பெருங் குற்றமாகக் கருதிக் ‘குற்றங்கடித’லில் வைத்தார் வள்ளுவர்.

-

கலையகமாகவும் மருந்தகமாகவும் - வளவாழ்வாகவும் அமைய வேண்டிய வைப்பு வளம் ஒரு கருமியின் இறுக்க இயல்பாக எப்பயனும் இல்லாமல் இப்படிப் பாழாகக் கிடக் கின்றதே! அவன் நன்மை கண்டானா? அவன் அமைதி தான் கண்டானா? அக்குற்றம் பால்மாட்டுக் காம்பை அறுத்தது போலும் பாவம் அல்லவா என வருந்தினார் போலும்!

செய்ய வேண்டிய நற்செயலுக்குப் பயன்படுத்தாத கருமியின் செல்வம் எவ்வளவு முயன்று காப்பினும் காக்கப்படுதல் இல்லாமல் அழிந்து போகும் என்கிறார் (437).

“செயற்பால் செய்யாது இவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்

பற்றுள்ளம் என்று சொல்லப்படும் கருமித்தனம் எந்தக் குற்றத்தொடும் வைத்து எண்ணக் கூடியது அன்று. அது பெருங் குற்றமாகும். சில சில குற்றங்கள் பொருள் இல்லாமையால் ஏற்படும் குற்றங்கள். இக்குற்றமோ பொருள் இருந்தும், அதன் அரிய பயன்பாட்டைத் தடுத்த அன்று கெடுத்த குற்றம். ஆதலால் பெருங்குற்றமேயாம் (439).

“பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று”

உடையவனுக்கும் உலகுக்கும் பயன்படாச் செல்வம் என்ன செல்வம்? நன்மையமைந்த செல்வமன்று. உடையானின் நல்ல தன்மை இல்லாமையால் அதுவும் நல்லது இல்லாததாய் 'நன்றியில் செல்வம்' ஆயிற்று. எவர்க்கும் நன்மை இல்லாத செல்வம் என்பது இதன் பொருள்.

அச்செல்வம் உடைமையால் புகழ் பெறாமல் போனாலும் போகிறான். பழியில்லாமலாவது இருந்தானா? அறவோர் பழிக்கு அல்லவோ அச்செல்வத்தால் ஆட்படுகின்றான்.

செல்வத்தின் நிலையாத் தன்மையை மேலும் கண்டு நன்றியில் செல்வத்தைத் தொடர்வோம்.