13. குழலும் யாழும்
கோவிந்த பாகவதரைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லை. துளசிராம் பாகவதர், கடோற்கச பாகவதர் ஆகிய பெரும் பெருந்தலைகளையெல்லாம் உருளச் செய்த முத்துக் கறுப்ப பாகவதரின் மாணவர்களுள் முதன்மையானவர் கோவிந்த பாகவதர் என்னும் பெருமை ஒன்றே போதுமானதாக இருந்தது. இதனோடு 'கணீர்' என்று ஒலிக்கும் கண்டமும், குழல், யாழ் முதலான கருவித் திறமும் பெற்றிருந்த அவரை நினைத்துப் பார்க்கவே மற்றை மற்றைப் பாகவதர்களுக்குச் சிம்மக் கனவாக இருந்தது. அவருடன் என்ன காரணம் கொண்டும் மாட்டிக் காள்ளக் கூடாது என்று அஞ்சினர். ரே மேடையில் அவருடன் பங்கெடுக்க வேண்டுமென்றால் அதிர்ச்சி வேட்டுத் தான் பலருக்கு. உண்மைத் திறமைக்கு முன் மண்டியிட்டுத் தானே ஆகவேண்டும்.
இசை பயிலத் தொடங்கிய காலத்திலிருந்தே கோவிந்த பாகவதருக்கு "இசையைப் போல் இனிமை தரும் ஒன்று உலகில் இல்லவே இல்லை.” என்னும் அழுத்தமான எண்ணம் உண்டு. இசை எவரையும் இசைவிக்கும்; மக்களுடன் மட்டுமென்ன, வுளுடனும் இசைவிக்கும்” என்று அடிக்கடி கூறுவார்.
66
கட
""
இசையுலகில் நிகரற்று விளங்கிய பாகவதருக்குத் திரு வள்ளுவர் மேல் கடுத்த கோபம் உண்டு என்ன இருந்தாலும் திருவள்ளுவர் “குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்று சொல்லியிருக்கக் கூடாது. மழலைச் சொல் கேட்காதவர்களுக்குத் தான் இசை, இன்பம் தருமாம். கேட்டவர்களுக்கு இனிக்காதாம். எவராக இருந்தால்தான் என்ன? எல்லோருக்கும் இன்பம் தருவது இசைதான். மழலை மொழியைச் சில முறைகள் கேட்டு விட்டால் புளித்துப் போகத்தான் செய்யும்! இசை என்றாவது புளிக்குமா? ஆ! தெய்வக் கலை யல்லவா இசை. என்று அழாக் குறையாகப் பேசுவார். அவர் பேசும்போது, இசையே அவருக்கென்று பிறந்தது போலவும், இசையை வளர்க்கவே
ல