திருக்குறள் கதைகள்
87
பின், மற்றொன்றைச் சரியாகச் செய்ய முடியுமா? எப்படியோ கச்சேரி முடிந்தது!
குழந்தைகளைப்
எ
இதற்கு முன் பாராதவரா பாக வதர்; அதன் அழகிலே தோயாதவரா? மின்வெட்டுப் போன்று சில வேளைகளில் சில உணர்ச்சிகள் அரும்பி விடுகின்றன அல்லவா! பாகவதர் கச்சேரியை முடித்துக் கொண்டு மேடையை விட்டுக் கீழே இறங்கினார். மழலைத் தேன் பொழியும் மலர்க் குழந்தையைத் தம் மெல்லிய கைகளால் எடுத்து மார்புற அணைத்துக் கொண்டார். “ம்மா... ம்மா... ப்பா... ப்பா..." என்று சொல்லிச் சொல்லிக் கூத்தாடினார். கன்னத்தைக் கிள்ளி விட்டார். கள்வெறி கொண்டவர் போல் களிப்புற்றார். குழந்தை தன் தாயிடம் போவதற்காகத் தன் பிஞ்சுக் கைகளை நீட்டி நீட்டிக் கால்களை உதைத்துத் துள்ளிய பின்னும் தர மன மில்லாமல் தாயினிடம் தந்தார். பிறகும் என்ன? ஊருக்கு வண்டியில் புறப்பட்டாலும், பாகவதரின் வெற்றுடல்தான் சென்றது. வள்ளிக்கு என்ன, காரணம் தெரியாதா? நமக்கொரு குழந்தை இருந்தால்...?" என்னும் ஏக்கம் புகுந்துவிட்டது பாகவதர் குடும்பத்திற்கு!
66
ஆரவார மிக்க பாகவதர் வீடு அடங்கிப் போயிற்று. உண்பதிலோ உடுப்பதிலோ உறங்குவதிலோ உலாவுவதிலோ அவருக்குக் கருத்து இல்லை. தித்திக்கும் முக்கனிக்கும்’ இனியதாம் இசையும் நடனமும் வெறுத்து விட்டன. இது என்ன வாழ்வு? சுவை கெட்ட வாழ்வு? குழந்தையில்லாத வாழ்வு வாழ்வா? மழலை இன்பம் நுகராத செவி செவியா?” என்று புண்பட்டார். பொன்னுடையவராக இருக்கலாம், புகழ் உடையவராக இருக்கலாம். இருந்தாலும் அவர்கள் உடைய வர்களா? மழலைத் தேன் பொழியும் மக்களை உடையவர்கள் அல்லரோ உடையவர்கள். "பொறுமையில்லாத அறிவு, இறங்குதுறை இல்லாத பூம்பொய்கை, ஆடையில்லாத அழகு, மணமில்லாத மலர், வெண்மதியில்லாத விண் இவை போல்வது அல்லவா மழலைச் செல்வர் இல்லாத மனை இப்படி எத்தனையோ எண்ணங்கள் பாகவதரைத் தின்றன. அதற்கு முன் இன்பக் கேணியாக இருந்தவை அனைத்தும் துன்பக் கடலாகத் தோன்றித் துன்புறுத்தின. மேடையில் ஏறிப்பாடிய நேரங்களில் மட்டும் அவரால் அமைதியாக இருக்க முடிந்ததே அன்றி, மற்றெங்கும் அமைதியாக இருக்க முடியவில்லை. ஆண்டுகளும் இப்படியே உருண்டு கொண்டுதான் இருந்தன! பாகவதர் இன்ப துன்பம் பற்றி அதற்குக் கவலையுண்டா?
ய