66
15. உள்ளதும் இல்லதும்
டம்
ஊருக்குப் போனவர் இங்கு இருக்கிறேன் இப்படி இருக்கிறேன்' என்றாவது எழுத வேண்டாமா? இருக்கும் இ கூடத் தெரியவில்லையே என்று நம்பியின் திருமணத்தின் போது எண்ணினேன். நீங்கள்தான் எங்களையெல்லாம் மறந்து விட்டீர்களே” என்று அன்பும் கவலையும் இணையக் கூறினார் சிந்துபட்டிச் சிவசாமி.
66
ச
என்ன செய்வது? புதிய இடம்; வேலையும் அதிகம்; எழுத மறந்துவிட்டேன் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று புன்முறுவலுடன் பேசினார் சிவசாமியின் அன்பர் அம்பலவாணர்.
அம்பலவாணரும் சிந்துபட்டிக்காரர்தான். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறினார். அங்குப் போனபின் அவருக்கு நல்ல வாய்ப்பு. சிந்துபட்டியில் நிலபுலம் தோட்டம் துரவு எதுவுமில்லாது இருந்த அவர் சென்னைக்குப் போனபின்பு, நல்ல ‘துட்டுக்காரர்’ ஆகிவிட்டார். மதுரைக்கு வணிக காரியமாக வந்த அவர் சிந்துபட்டிக்கு பிறந்து வளர்ந்த ஊர் அல்லவா - வந்தார்.
சிந்துபட்டியிலே இருக்கும்போது அம்பலவாணர் ஏழையாக இருந்தாலும்கூட ஊரார் மதிக்க, பெரிய மனிதர் என்று போற்ற வாழ்ந்தவர். அவர் பல ஆண்டுக்காலம் கழித்து வந்திருந்தது ஊராருக்குப் பேரின்பமாக இருந்தது. சிவசாமி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. "என் வீட்டிலே விருந்து முடித்துக் கொண்டுதான் வேறெங்கும் போகவேண்டும்” என்று அம்பல வாணரைத் தடுத்து நிறுத்திவிட்டார் சிவசாமி. விருந்து முடித்துக்கொண்டு வெற்றிலை பாக்கு மென்றுகொண்டு பேசினர்.
'மூத்தது மோளை; இளையது காளை' என்பார்கள். ஆனால் எங்கள் வீட்டைப் பொறுத்த அளவில் மூத்ததுதான் காளை; இளையது மோளை. பிள்ளையொன்று இருந்தால் நம்பியைப்போல இருக்கவேண்டும். 'அப்பன் வாக்கு அருள் வாக்கு' என்று நினைப்பவன் - மகிழ்ச்சி பெருக்கெடுக்கப் பேசினார் சிவசாமி.